பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шселѣей-есѣшвоваобоварамъ 343 உடன் சென்று பாவேந்தரின் துணைவியாருக்கும், மக்களுக்கும் தேவையான நகைகளும் புடவைகளும் எடுத்துத் தந்தோம். என்னையும், அலமேலுவையும் தவிர வேறு யார் இதில் தலையிட்டிருந்தாலும் பாவேந்தர் அனுமதித்திருக்க மாட்டார். இதைப் பற்றி நான் அண்ணாவிடம் சொன்னபோது, "நல்ல வேளை செய்தீர்கள்! பாரதிதாசனுக்கு எல்லா அறிவும் உண்டு; பிழைக்கும் அறிவு மட்டும் கிடையாது. நிச்சயமாக அந்த ஏழாயிரமும் மிஞ்சும்” என்றார். 'இன்ப இரவு நாடக அரங்கேற்றம் தொடர்பாகப் பாரதிதாசன் சேலத்துக்கும் வேறு சில ஊர்களுக்கும் சென்றார். நாங்கள் குடியிருந்த வீட்டின் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருந்த தாலும், வேறு பல சிக்கல்களாலும் அவ்வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மூன்றாம் சந்தின் கோடி வீட்டில் குடியேறினோம். அது இசுலாமியர் வாழும் பகுதி. அந்த வீடு பெரியது; வளமளை(Bungalow). அதன் உரிமையாளர் ஒரு முஸ்லீம். அவருக்கு இசுலாமிய மனைவியர் சிலரும், இரண்டு இந்து மனைவியரும் இருந்தனர். அவருடைய இந்து மனைவியருக்குப் பாதுகாப்பாகவும், துணையாகவும் நாங்கள் இருப்போம் என்ற கருத்தில் வாடகையில்லாமலே குடியிருக்க எங்களை அனுமதித்தார். ஆனால் வாடகையில்லாமலே குடியிருக்க நாங்கள் மறுத்துவிட்டோம். பாரதிதாசன் திங்கள் தோறும் வாடகை ரூ. 40/- கொடுக்கத் தாமே முன் வந்தார். அவரும் எங்களுடன் அதே வீட்டில் தங்கினார். சென்னையில் மாசிலாமணி முதலியார் என்ற சிறந்த சித்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்தார்; அவர் பாரதிதாசனுக்கு மிகவும் வேண்டியவர் அவர் வீட்டிற்குப் பின்புறம் இருந்த ஒரு சிறிய அறையில் ஒரு திங்கள் தங்கியிருந்தோம். அப்போது சென்னையில் நடிகவேள் இராதா நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் பாரதி தாசனுக்கும் எங்களுக்கும் மனவேறுபாடு ஏற்பட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னைத் திருவல்லிக்கேணி வீட்டில் இருந்தபோது வருங்காலத் தமிழகம் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதித் தரும்படி திருவாளர் சம்பந்தம் என்ற இயக்கத் தோழர் என்னிடம் கேட்டார். நானும் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் கையெழுத்துப் படியைப் பெறுவதற்காகத் திரு. சம்பந்தம் என் வீட்டுக் கதவைத்தட்டித் திறந்து கொண்டு உள்ளே வந்தார். நான் அப்போது வீட்டில் இல்லை. உள்ளே நுழைந்த சம்பந்தத்தைக் கண்ட பாரதிதாசன் “உள்ளே