பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கெட்டிநாட்டிலிருந்துசென்னைவரை. வராதே" என்று சொல்லி விரட்டி விட்டார். அடுத்தநாள் சம்பந்தம் என்னைத் தனியாகச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி வருந்தினார். நான் வீட்டில் இல்லாத நேரங்களில் பாரதிதாசன் தம் நண்பர்களுடன் கூடிக் குடித்து விட்டுக் கும்மாளமிடுவதை என்னால், சகித்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகப் பாவேந்தருக்கும் எங்களுக்கும் இருந்த குடும்ப நட்புத் தேய்புரிப் பழங் கயிறாகி இறுதியில் இற்று விழுந்தது. அவரோடு ஒன்றாகத் தங்கும் நிலை மாறியது. - நான் பாரதிதாசனைப் பார்த்து சொன்னேன். 'நீங்கள் பெருங்கவிஞர். உங்களுடன் நெருங்கிப் பழகி உங்கள் சிறப்பையெல்லாம் நான் அறிந்து கொண்டேன். தம் பிரிவு துன்பமானதுதான். என்றாலும், நாம் இனி எங்கு வேண்டுமானாலும் வெளியில் சந்தித்துக் கொள்ளலாம்; வீட்டில் வேண்டாம்" என்றேன். அதன் பிறகு பாரதிதாசன் என் இல்லத்துக்கு வருவதில்லை. புலவர் குழுவிலும், வேறு சில கூட்டங்களிலும் இருவரும் சந்திப்பதுண்டு. எங்கள் நட்பைப் பிரிப்பதற்காக எதிரிகள் வேலை செய்வதாகப் பாரதிதாசன் அப்போது அடிக்கடி என்னிடம் சொல்லுவார்; வருந்துவார். எங்கள் வெளிநட்புத் தொடர்ந்தது; ஆனால் வீட்டு நட்பு அறுந்தது. உணவுக் கொள்கை: புலால் உணவுதான் பழந்தமிழர் உணவு என்ற கொள்கையில் பாரதிதாசன் உறுதியானவர்; புலால் உணவு உண்டால் தான் வீர உணர்வு மேலோங்கி நிற்கும் என்பதிலும் அளவு கடந்த நம்பிக்கையுடையவர். ஆனால் சைவ உணவு தான் தமிழர் உணவு என்பதில் நான் அதிக நம்பிக்கையுள்ளவன். இந்தக் கொள்கை வேறுபாடு எங்களை எந்தவிதத்திலும் பாதித்ததில்லை. நாங்கள் இருவரும் எப்போதும் அருகருகே அமர்ந்து உண்ணும் வழக்கமுடையவர்கள். அவருடைய இலையில் எல்லாவிதமான புலவும் மீனும் வகைவகையாகப் பரிமாறப்படும். எளிய மரக்கறி உணவு என் இலையில் பரிமாறப்படும். அவரவர் அவரவருடைய உணவை விரும்பிச் சுவைத்துச் சாப்பிடுவோம். நான் மரக்கறி உணவு சாப்பிடுவதை அவர் கேலி செய்ததுமில்லை; கண்டித்ததுமில்லை. பாரதிதாசனுக்கு மிகவும் நெருக்கமான இசுலாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி அவரைத் தேடி வருவார். அவர் ஒரு நாள் பாவேந்தரைப்