பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li ந்தர்-ஒருபல்கலைக்கழகம் 345 பார்த்து, "நீர் புலால் உணவுதான் தமிழர் உணவு என்ற கொள்கை யுடையவர். உமது நண்பர் அப்பாதுரை அக்கொள்கைக்கு எதிரான வர். தமிழர் உணவான புலாலை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், கொள்கையளவில் அவர் ஆரியர் தானே?" என்று கேட்டார். "அதெப்படி? அவர் கொள்கைப்படி அவர் நடக்கிறார். நம்முடைய கொள்கைப்படி நாம் நடக்கிறோம். கொள்கை ஒன்றும் நடப்பு வேறாகவும் இருப்பதுதான் தவறு" என்று விடையிறுத்தார் பாரதிதாசன். தமிழியக்கம் மறைமலையடிகளிடம் ஒருமுறை நான் பேசிக் கொண்டிருந்த போது பாரதியும் கவிஞனில்லை; பாரதிதாசனும் கவிஞனில்லை. இருவருமே வடசொற்களைக் கலந்து பாட்டெழுதுகிறார்கள்" என்று ஒரு கருத்தை வெளியிட்டார். "வட சொற்களை மிகுதியாகக் கலந்து பாட்டெழுதுவதை நான் வரவேற்கவில்லை. என்றாலும் மிக அரிதாக ஏற்ற இடங்களில் ஒரிரு வடசொற்களைக் கலக்கும்போது கவிதையழகு மிகுதியாகிறது. வள்ளுவர், கம்பர் போன்ற பெருங்கவிஞர்களும் இதற்கு விலக்கானவர் அல்லர். அவ்வாறு பயன்படுத்தும் அவ்வரிய சொற்களைத் தமிழாகவே எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து," என்று நான் மறைமலையடிகளிடம் சொன்னேன். "வடசொற்களை நேரடியாகத் தமிழ்க்கவிதையில் பயன்படுத்த வேண்டியதில்லை. அவற்றுக்கு ஒப்பான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம்; அல்லது புதிதாகப் படைத்துக் கொள்ளலாம்” என்று மறைமலையடிகள் மீண்டும் சொன்னார். "சமஸ்கிருதம் நமக்கு எதிரான மொழியன்று. நீங்களே காளிதாசனின் கவிதையழகில் நெஞ்சைப் பறி கொடுத்துச் சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். சாதி வருணவேறுபாடு உடையவர்கள் அதைப் பயன்படுத்துவதாலேயே நாம் அதை ஆரியம் என்று எதிர்க்கிறோம். இலக்கிய வளமும், கருத்துச் செறிவும் உள்ள சமஸ்கிருதச் சொற்களை மிக இன்றியமையாத இடங்களில், இலக்கண வரம்புக்கு உட்படுத்திப் பயன்படுத்துவதில் கவிதையழகு மிகுதியாகிறது" என்பதை நான் மீண்டும் சொன்னேன். அக்கருத்தை ஒரளவு சரியென்று மறைமலையடிகள் ஏற்றுக்கொண்டார். மறைமலையடிகளைச் சந்தித்தது பற்றியும், அவரிடம் மொழித் தூய்மை பற்றி உரையாடியது பற்றியும், அடுத்த முறை பாரதி