பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 35 "நான் முருகுசுந்தரம்... நான்" என்று கூறுவதற்கு முன்பாகவே அவர் "ஒ நீங்கள்தானா? தெரியுமே. சேலத்துக் கவிஞர். உம் பாட்டைக் குயிலில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். நான்தான் பொன்னடியான். கவிஞருக்குத் துணையாக இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். நான் "பாவேந்தரைப் பார்க்க வேண்டும்’ என்று கூறியதும் 'உட்காருங்கள்; சாப்பிடுகிறார். சாப்பிட்டதும் பார்க்கலாம்” என்று சொன்னார். பாவேந்தர் சாப்பிட்டு முடித்ததும் பொன்னடி உள்ளே சென்று நான் வந்திருப்பதாகச் சொன்னார். பாவேந்தரும் நேராக வரவேற்பு அறைக்கு வந்தார். அப்போது முன்னிரவு ஏழு மணி. மின்விளக்கு வெளிச்சத்தில் அவர் தோற்றம் மிகவும் எடுப்பாக உள்ளத்தில் சட்டென்று பதியும்படியாக இருந்தது. இடுப்பில் பச்சை நிற லுங்கி; மேலே திறந்த மேனி. வரும்போதே கனைத்துக் கொண்டு வந்தார். கனைப்பொலியைக் கேட்டவுடன் என்னையறியாமல் நான் எழுந்து நின்றுகொண்டேன். அவருடைய நடையிலும் தலைநிமிர்விலும் உலகையே அலட்சியம் செய்யும் அசாதாரண நிலை தென்பட்டது. என் அருகில் வருவதற்கு முன்பாகவே, அவர் விழிகள் என்னை நிமிர்ந்து பார்த்த பார்வை என்ன? யார் நீ? என்று கேட்பது போல் இருந்தது. அவர் என்னை வாய் திறந்து கேட்டதற்கு முன்பாக அவசரப்பட்டுச் "சேலம் சங்கரன் கடிதம் கொடுத்திருக்கிறார்" என்று சொன்னேன். "அப்படியா? படி" என்றார். நானும் கடிதத்தை நின்று கொண்டே படித்தேன். படித்து முடித்ததும் தாம் அமர்ந்திருந்த சோபாவைக் காட்டி "இப்படி வந்து உட்கார்’ என்று சொன்னார். நானும் அடக்கத்தோடு சோபாவின் நுனியில் அமர்ந்த வண்ணம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "உன் பேர்?" “முருகு சுந்தரம்?" அதற்குள் பொன்னடி குறுக்கிட்டு, இவர் குயிலிலே அடிக்கடி எழுதியிருக்கிறார் என்று சொன்னார். "அப்படியா! என்ன படிச்சிருக்க?" "புலவர்; எம்.ஏ." "என்ன கையிலே புத்தகம்?" "இது நான் எழுதின பள்ளிப் பாடப் புத்தகம். இதிலே நாமக்கல்