பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 செட்டிநாட்டிலிருந்து சென்னை வரை. தாசனைச் சந்தித்தபோது கூறினேன். அதைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த பாரதிதாசன் "அது சரி! கம்பனுக்கும் எனக்கும் என்ன முடிச்சு?" என்று கேட்டார். "கம்பன் வடசொல்லைத் தம் பாடல்களில் அளவோடும் அழகோடும் கலந்து பாடியிருக்கிறான்; நீங்களும் அவ்வாறு பாடியிருக்கிறீர். மற்ற கவிஞர்கள் சொல்லழகு தனித்தனிச் சொல்லில் இருக்கும்படி பாடுவது வழக்கம். ஆனால் கம்பன் சந்தத்தையும் சொல்லையும் இணைத்து எத்தனை எத்தனை தந்திரம் காட்ட முடியுமோ அத்தனையும் தன் பாடல்களில் காட்டியிருக்கிறான். தெரிந்தோ தெரியாமலோ கம்பனின் இந்த உத்தியை உங்கள் பாடல்களில் கையாண்டிருக்கிறீர்கள்” என்று நான் சொன்னேன். ‘எப்படி? என்றார் பாரதிதாசன். அவருடைய காதல் நினைவுகள் என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஒரே குறை என்று பாடலை எடுத்துச் சொன்னேன். அன்பிருக்கும். என்று தொடங்கும் பாடல் அது. இருக்கும்! இருக்கும்! என்று முடியும் அந்தச் சந்த உத்தி கம்பன் பாட்டிலும் காணப்படுகிறது என்பதைக் கூறி, அக்கம்பராமாயணப் பாடலையும் சொன்னேன். பாரதிதாசன் ஒத்துக் கொண்டார். இனி எழுதவிருக்கும் நூல்களைத் தனித் தமிழிலேயே எழுதப் போவதாகவும் கூறினார். சென்னையில் எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, நான் எழுதிய தமிழ் வாழ்க! என்ற நூலைக் கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தார் பாரதிதாசன். பிறகு அதைக் காட்டி நீங்கள் பேசியதா? என்று கேட்டார். 'நீங்கள் செட்டிநாடு வருவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் கோனாப்பட்டில் பத்து நாட்கள் தமிழ் விழா நடத்தினேன். அந்த விழாவில் நான் பேசியவற்றையும், பேச நினைத்தவற்றையும் தொகுத்துத் தமிழ் வாழ்க என்ற பெயரில் இந்நூலை எழுதினேன். தமிழ் வாழ்க! என்பது ஒரு மந்திரம். தமிழ் இயல் வாழ்க, தமிழ் இசை வாழ்க, தமிழ் நாடகம் வாழ்க, தமிழ் மருத்துவம் வாழ்க:தமிழ் வாணிகவியல் வாழ்க-என்று ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழி மற்ற மொழிகளைவிட எவ்வாறு மேம்பட்டு விளங்குகின்றது என்பதை மையமாக வைத்து ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் வெளிவந்ததும் திருவாளர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் ஐம்பது படிகள் வாங்கிப் பெரியார், அண்ணா முதல் தமிழ் நாட்டில் உள்ள இயக்கத் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் அனுப்பி வைத்தார் என்று நான் சொன்னேன்.