பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 349 திருக்குறளின் கடவுள் வாழ்த்துக் கொள்கையும் ஒன்றுதான் என்பது என் கருத்து. கோவை முத்தமிழ் மாநாடு 1950ஆம் ஆண்டு மேத் திங்கள் 27,28 ஆகிய நாட்களில் முத்தமிழ் மாநாடு ஒன்று கோவையில் நடைபெற்றது. தாய்க்கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. தனிக்கட்சியாக இயங்கத் தொடங்கிய நேரம். தி.மு.க. தன் சொந்த வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. நாவலர் ச. சோமசுந்தரபாரதியார் மாநாட்டுத் தலைமை ஏற்றியிருந்தார். இம்மாநாட்டில் என் பங்கு அதிகம். இம்மாநாட்டில் திராவிடம் என்ற சொல் கடும் சொற்டோருக்குக் காரணமாகியது. நாவலர் பாரதியார் திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாகச் சாடினார். திராவிடர் என்ற சொல்லுக்கு 'ஓடிவந்தவர் என்று பொருள். அமிழ்தமனைய தமிழ் என்னும் சொல்லிருக்கத் திராவிடம் என்ற சொல்லை ஏன் கையாள வேண்டும் என்பது அவர் வாதம். திராவிட முன்னேற்றக் கழகம்’ என்பது தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றிருந்தால் சிறப்பு என்று அவர் வற்புறுத்தினார். பாரதிதாசனும் நாவலர் கொள்கையை ஆதரித்துப் பேசினார். அதற்கு அண்ணா, "நான் தமிழ் உணர்வு அற்றவன் அல்லேன். என் வீட்டில உள்ள பெரியார் படத்தின் கீழ் தமிழர் தலைவர் பெரியார் என்று தான் எழுதிவைத்துள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் என்று நான் கட்சிக்கு பெயர் வைத்துள்ளது. கொள்கையின் அடிப் படையில்' என்று பேசினார். நான் அண்ணாவை ஆதரித்துப்பேசினேன். அப்போது மாற்றுக் கட்சிக்காரர் சிலர் பெரியாரைத் தமிழர் அல்லர் என்று கூறிக் கண்டனம் செய்தனர். திராவிட மொழிகள் பேசப்பட்ட நிலப்பரப்புகள் எல்லாம் அப்போது பிரிக்கப்படாமல் ஒரே மாநிலமாக அமைந்திருந்தன. இந்தக் காரணங்களை உள்ளத்தில் கொண்டு, கொள்கை அடிப்படையில் அண்ணா திராவிடத்தை ஏற்றார். முத்தமிழ் மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஒரு குழுமம் (Board) அமைக்க வேண்டும் என்று பாரதிதாசன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணாவுக்கு அது விருப்பமில்லை. என்றாலும் அதை அவர் எதிர்க்கவில்லை. தமிழ் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்களாக நானும், நாவலர் நெடுஞ்செழியனும்