பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 351 புலவர் குழு. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட புலவர் குழுவில், முற்போக்குப் புலவர்களும், பிற்போக்குப் புலவர்களும் சரிசமமாக இருந்தார்கள். இரண்டு குழுவினர்க்கும் சில சமயங்களில் பலமான சொற்போர்களும், மோதல்களும் ஏற்பட்டதுண்டு. சென்னையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் இரண்டு குழுவும் அடிதடியில் இறங்கும் அளவுக்குப் பாவேந்தர் சினம் பொங்கப் பேசினார். நிகழ்ச்சி எனக்குத் தெளிவில்லை. புலவர் குழுவிலிருந்து இருதரப்புத் தீவிரவாதிகளும் வெளியேறினர். இறுதியில் நானும் இலக்குவனாருந்தான் மிஞ்சினோம். புலவர் குழுவில் எதிர்ப்புணர்ச்சியோடு இரண்டு கட்சிகள் இருந்ததற்கு அரசியல் வேறுபாடு ஒரு காரணம்; கொள்கை வேறுபாடு மற்றொரு காரணம். தெ.பொ.மீ. கிரேக்க மொழியிலிருந்து தமிழ் வந்ததாகச் சொல்கிறார் என்று பாவாணர் குற்றம் சாட்டுவார். பாவாணரின் ஆய்வுகள் தவறானவை; முறையற்றவை என்று தெ.பொ.மீ கூறுவார். இரண்டு கட்சிக்காரர்களுக்கும் நான் மிகவும் நெருக்கமானவன். என்னுடைய கூட்டத்தில் தெ.பொ.மீயோ, துரை. அரங்கனாரோ அல்லது அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ தமிழை எதிர்த்துப் பேசியதில்லை. என்னைத்தவிர வேறு யாராலும் பாவேந்தர் கோபத்தைச் சமாளித்திருக்க முடியாது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாவேந்தரின் பங்கு பாரதிதாசனின் இலக்கியப் பண்புகளை ஆய்வு செய்வதற்கு முன் பாரதியின் இலக்கியப் பண்புகளை ஆராய வேண்டும். கம்பர் காலத்திலிருந்து பாரதி காலம் வரை கவிதை ஒரு குறிப்பிட்ட மரச்சட்டத்துக்குள் சிக்கிக் கிடந்தது. கவிதையின் வெளித்தோற்றம் மட்டும் இருந்ததே தவிர, உள் உயிர் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. இடைக்காலத்தில் சிறந்த கவிஞர்கள் சிலர் இருந்தாலும், அவர்கள் அந்த மரச்சட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தனர். பாரதி அந்தச் சட்டத்தை உடைத்து, யாப்பிலும் கருத்திலும் புதுமை செய்தார். பாரதியின் கவிதைப் பண்பை முழுக்க முழுக்கப் புதிது என்று பலர் நம்பினர். உண்மையில் அது புதிதன்று; மிகவும் தொன்மையானது.