பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பாலும் தெளிதேனும் சத்தியதாஸ் என்பவர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்குத் தமிழிலும், பாவேந்தர் பாட்டிலும் அதிக ஈடுபாடு உண்டு. அவர் பாவேந்தரை அழைத்துத் தம் பள்ளி மாணவர் இலக்கிய மன்ற ஆண்டுவிழாவில் பேச வைக்க விரும்பினார். அவ்விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். நான் பாவேந்தரைக் கண்டுபேசி ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். பள்ளியில் இலக்கிய மன்ற விழாவுக்கு நாள் குறிப்பிட்டு, அன்று விழாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் விமரிசையாகத் தலைமையாசிரியர் செய்திருந்தார்; அழைப்பிதழ் அச்சிட்டு ஊர்ப் பிரமுகர்களுக்கு அனுப்பியிருந்தார். பெருங்கவிஞர் பேச வருகிறார் என்று ஊர் மக்கள் பள்ளிக்குத் திரளாக வந்திருந்தனர். அவ்விழாவுக்கு வந்திருந்த ஊர்ப் பிரமுகர்கள் எல்லாரும் பேராயக் கட்சி (Congress)யைச் சார்ந்தவர்கள்; தீவிர வைணவர்கள். கவிஞர் என்றவுடன் நீளக் கோட்டும், தலையில் உருமாலும், காதில் கடுக்கனும், கைத்தடியுமாகப் பழங்கால முறைப்படி தோன்றுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் பாவேந்தர் நவீன உடையோடும், அச்சுறுத்தும் மீசையோடும், கையில் சிகரெட்டின் (Tin) நெருப்புப் பெட்டி சமேதராக மிடுக்கோடு பள்ளியில் நுழைந்தார். இவர் தோற்றத்தைப் பார்த்ததும் ஊர்ப்பிரமுகர்கள் முகம் சுளித்தனர்; அவர்கள் நெற்றியில் நிரம்பியிருந்த நாமத்தைப் பார்த்து இவர் முகஞ்சுளித்தார். கூட்டம் தொடங்கியது. பாவேந்தர் வாயிலிருந்து சுயமரியாதைக் கருத்துகள் அருவியைப் போல் குதித்துப் புரண்டுவந்தன. அவர் சொற்களின் வீச்சு சம்மட்டி அடியாக விழுந்தது. மாணவர்களுக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடல்களின் மேல் அவர் கவனம் திரும்பியது. பிள்ளையார் வாழ்த்தாக ஒளவையார் பாடிய பாடல் ஒன்று அவரிடம் மாட்டிக் கொண்டது. அப்பாடல்: பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நானும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. "என்ன ஏமாற்று இது. அவனவன் பத்து வருஷம் பெரும் புலவர் கிட்ட பாடங் கேட்டாலும் இயற்றமிழைக் கரைகாண முடியல. ஓர் அனாவுக்கு பாலும் தேனும் கொழுக்கட்டையும் வாங்கிப் பிள்ளையாருக்குப் படைச்சிட்டா முத்தமிழும் வந்திடுமா? முத்தமிழ் என்ன அவ்வளவு 'சீப்பாப் போச்சா? இதை ஒரு பாட்டுன்னு இவ