பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாவேந்தருடன் திரு.எஸ்.ஆர். சுப்பிரமணியம் பூதானத் தொண்டர்களுக்கு எஸ்.ஆர்.எஸ். என்பது ஒர் உற்சாகச் சொல்: 'எஸ்.ஆர்.எஸ் என்ற மூன்றெழுத்துக்குத் தன்னலமற்ற உழைப்பு, தொண்டு, துணிச்சல் என்று பல பொருள்கள் உண்டு. இலக்கியமும் சமூகத் தொண்டும் இவருடைய இரண்டு கண்கள்! சர்வோதயம் இவருடைய உடம்பு. அறிஞர் அண்ணாத்துரை இளைய தலைமுறைக்கு 'அண்ணா. எஸ்.ஆர்.எஸ். இளைய தலைமுறைக்கு 'அண்ணாச்சி. பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் தொடர்பும், அரவிந்தர் போன்ற ஆன்மீகவாதிகள் தொடர்பும் ப. ஜீவானந்தம் பி. ராமமூர்த்தி, ஈ.எம். எஸ். நம்பூத்ரிபாத், எம்.ஆர். வெங்கட்ராமன் போன்ற அரசியல்வாதிகளின் தொடர்பும் இளமையிலிருந்தே இவருக்கு இருந்தன. தமிழ்நாடு என்றவுடன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நினைவில் தட்டுப்பட்டது திரு.எஸ்.ஆர்.எஸ். அவர்களின் உருவம்தான். பன்னிரண்டாம் வயதில் பாரதியார் சங்கமும், பத்தொன்பதாம் வயதில் பாரதி கவிதா மண்டலமும் நடத்திய செயல் வீரர். பாரதிதாசன்-வாத்தியார் சுப்புரத்தினமாகத் கதர்ச் சட்டை அணிந்து தேசியப் பாடல்கள் பாடிக் கொண் டிருந்த நாளிலிருந்து, அவர் பாவேந்தராக மடிந்தவரை அன்பராகவும், அணுக்கத் தோழராகவும் விளங்கியவர்.