பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 363 கவிஞர் அவரை நடிக்கச் சொல்லுவார். அவர் சோகமாக நடித்தால் எல்லாரும் கண்ணிர் விடுவர். சிருங்காரமாக நடித்தால் கலகல வென்று நகைப்பர். கந்தசாமி ஆச்சாரி பாவேந்தருடன் சிலம்பு விளையாடுபவர்; சங்கரன் குளம் கொட்டடி என்ற சிலம்புப் பயிற்சிக் கூடத்தின் முக்கியஸ்தர்; வயது தளர்ந்த காலத்திலும், உடல் கட்டுடன் விளங்கினார். வைத்தியம் கூடக் கொஞ்சம் தெரியும். இவர்களைப் போன்றவர் இன்னும் பலபேர். மாதா மாதம் உதவிகள் மெளனமாகவே நடக்கும். 1935-ஆம் ஆண்டு பாவேந்தர் அப்போது அதிகமாகச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு அதிகமாகச் சுருட்டைப் புகைத்தால் உடல் நலம் அதிகம் பாதிக்குமே அவரிடம் சொல்லக் கூடாதா? என்று குயில் சிவா அவர்களைக் கேட்டேன். நீதான் சொல்லேன் என்றார் சிவா. 'இப்படிச் சுருட்டுப் பிடிக்கின்றீர்கள்; உடலுக்கும் கெடுதல் பார்ப்பதற்கும் நன்றாயில்லை என்றேன் பாவேந்தரைப் பார்த்து. என்ன செய்யச் சொல்றே? என்று கேட்டார் பாவேந்தர். 'எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்த நான் எப்படியோ விட்டுவிட வேண்டும்! என்றேன். சரி என்று பாதி சுருட்டைக் கீழே எறிந்து விட்டார் . எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. சிவா அவர்களும் எதிர் பார்க்கவில்லை. நான்கு நாட்கள் சென்றன. வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்தார். "சுப்பிரமணியா! சுருட்டு வேண்டாமின்னியே, இப்ப என்ன செய்யறது?’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஊமையாய் விழித்தேன். பக்கத்திலிருந்த சிவா பீடி பிடிக்கிறது என்று அவருக்கே உரிய முறையில் சிரித்தார், 'சொல்றியே கொண்டாயேன்” என்றார் பாவேந்தர். நான் ஒடிப்போய் பீடிக்கட்டு ஒன்று வாங்கி வந்தேன். அதனைப் பற்ற வைத்தார். சில நாட்களில் பீடி எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்தப் பீடி இவ்வளவு பிடித்தால் என்று நான் தொடங்கினேன். 'என்னதாம் செய்யறது?-பாவேந்தர் கேட்டார் 'பீடி வேண்டாம்! என்றேன். உடனே வாயிலிருந்த பீடியைக் கீழே போட்டார். மூன்று நாட்கள் சென்றன. அன்பர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களிடம் சுருட்டுப் பிடித்தேன்; வேண்டாம் என்றான். விட்டு விட்டேன். பீடி