பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பாவேந்தருடன் பிடித்தேன். அதையும் வேண்டாம் என்றான். அதையும் விட்டு விட்டேன். இப்ப என்னப்பா பண்றது?’ என்றார் பாவேந்தர். அவர்கள் முன்னும் பின்னும் தெரியாமல் விழித்தனர். சிவா நாயக்கர் உடனே பொடி போடேன், என்று கூறி அவருக்கே உரிய சிரிப்பை ஒலித்தார். என்னைப் பார்த்து ஏம்பா அவர் தான் சொல்லிட்டாரே! அப்ரம் என்னா?” என்றார். உடனே நான் பொடி வாங்கி வந்தேன். சில தினங்களில் பொடி மேல்சட்டை மேல் விளையாடத் தொடங்கியது. இது மிக மிக மோசம். பொடி சட்டையெல்லாம் ஆகிவிடுகிறது, என்றேன். உடனே பொடி மட்டையைத்துக்கி எறிந்தார். நான் ஒடி ஒரு காப்பி கொண்டு வந்தேன். பேசாமல் குடித்தார். யாருமே பேசவில்லை. என் மனதில் ஒரு திகில். அடுத்த சில தினங்கள் சென்றன. சுப்ரமண்யா! சுருட்டுப் பிடித்தால் வேண்டாம்; பீடி பிடித்தால் வேண்டாம்; பொடி போட்டால் வேண்டாம். இப்போ என்னப்பா பண்றது? என்றார் பாவேந்தர். உடனே சிவா அவர்கள் சிகரெட் என்று சொல்லிச் சிரித்தார். இதாப்பா அவர் தான் சொல்லிட்டாரே! என்று குலுங்கக் குலுங்கச் சிரித்தார். நான் ஓடிப்போய் சிகரெட் வாங்கி வந்தேன். "கொஞ்சமாகத்தான் பிடிப்பேன் என்று சிவா நாயக்கரைப் பார்த்துக் கண் சிமிட்டினார் பாவேந்தர். சுருட்டு வேண்டாம் என்று சொன்னதும் விட்டது-பீடி, பொடியை விட்டது-என்னால் மறக்கவே முடியவில்லை. இந்தப் பழக்கங்களை நினைத்தவுடனே நிறுத்துவது யாருக்கும் எளிதான காரியம் அல்ல. பாவேந்தரின் மனத்திட்பமே நினைத்ததும் பழக்கத்தை விடமுடிகிறது. 1936ஆம் ஆண்டு கவிதா மண்டலக் காரியாலயத்தில் ஒரு நாள் பச்சையப்ப உடையார், குயில் சிவா நாயக்கர் தம்புசாமி முதலியார், பேராசிரியர் பஞ்சாபகேசய்யர் முதலியோர் அமர்ந்திருந்தனர். பஞ்சாபகேசய்யர் தெலுங்கு சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனைகள் பாடமுடியாது. அப்படி ஏதோ பாடினாலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது" என்றார். அத என்னாப்பா அப்படிச் சொல்றான். தமிழில் ஏன் முடியாது? எவ்வளவு கடினமான தாளத்திலும் தமிழில் பாடமுடியும். லாவணியைச் சவுக்கதாளத்தில் பாடுவது கடினம்; பாட்டிலிருக்கிறது. இதோ.பார் என்று பூரீ மதி இவளார் என்ற அவரது லாவணியைப் பாடிக் காட்டினார். உடையாரே தாளம் போடு என்றார். அப்போது அவர் பாடியது தாளத்தில் எத்தகைய அபாரஞானம் அவருக்கு இருந்தது என்பது வெளியாயிற்று.