பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чисемѣрі-есѣшвоваобозврань 365 தியாகராசர் கீர்த்தனைபோல் தமிழில் பாடமுடியாது என்று மறுபடியும் வற்புறுத்தினார் பேராசிரியர். பேச்சு ஒருவாறு முடிந்து 12-மணிக்கு எல்லோரும் எழுந்தனர். கவிஞர் மட்டும் உட்கார்ந்திருந்தார். திடீரென்று சுப்ரமண்யா அவன் என்ன சொன்னான்? தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாடமுடியாது. அது என்னதியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கா?” என்று கேட்டார். 'இருக்கிறது என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் மொழி பெயர்ப்பும் இசையமைப்பும் என்ற தலைப்பில் வெளியாகியிருந்த பத்துத் தியாகய்யரின் கீர்த்தனைகளைக் கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். நிஜ மர்ம முலயனு' என்ற தியாகய்யர் கீர்த்தனையின் மொழிபெயர்ப்பு தியாகராச ருடைய முத்திரையுடன் எழுதினார். உடையாரே பாடு!" என்றார்; அவருடன் சேர்ந்தும் பாடினார். அவன் என்னமோ சொன்னானே சங்கதி, அதெல்லாம் போட்டுப் பாடு என்றார். அவரும் பாடி விட்டு இந்தப் பாட்டு அற்புதம், என்றார். பத்துக் கீர்த்தனைகளை மொழிபெயர்த்துக் கவிதாமண்டலத்தில் வெளியிட்டோம். பாரதியைப் பற்றிப் பாவேந்தர் பேசத் தொடங்கினால், உண்மை இதயத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டுக் கொண்டுவரும். மேடையேறிப் பேசும்போது யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை அப்படியே பேசவேண்டும் என்பது அவர் கொள்கை. அக்கொள்கையை அவர் அப்படியே கடைப்பிடித்ததோடு, எனக்கும் அதே கொள்கையை ஆலோசனையாகவும், எச்சரிக்கையாகவும் வழங்கினார். 1937ஆம் ஆண்டு புதுச்சேரி தொழிலாளர் இயக்கத்தின் வேகமான நாட்கள், அப்போது என் பேச்சில் சூடு அதிகம் என்பார்கள். தூவ்போ வீதியும், மகாத்மா காந்தி வீதியும் சந்திக்கும் முனையில் அந்த நாளில் ஒரு வெற்றிலை-பாக்குக்கடை இருந்தது. அதன் சொந்தக்காரர் சந்திரன் என்பவர். அந்தப் பெட்டிக்கடைதான் பாவேந்தரும் அவர் நண்பர்களும் சந்திக்கும் அரசியல் தலைமையகம். - வாத்தியார் வந்துவிட்டால் எத்தனை மணி நேரமானாலும் சந்திரன் இருக்கையில் அமரமாட்டார். பாவேந்தர் மேல் அவருக்கு அப்படி ஒரு பக்தி. பாவேந்தர் பள்ளிப் பணியை முடித்துக்கொண்டு நேரே வீட்டுக்குப் போகமாட்டார். அந்த வெற்றிலை-பாக்குக்கடையில்