பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ll ந்தர்-ஒருபல் - o 37 "சரிங்க ஐயா!" என்றேன். "சைவத்தை நம்பி நம்ம வீர உணர்ச்சியே போயிடிச்சு பழைய காலத்திலே ஏறு தழுவினோம்! இப்ப எவன் தழுவறா? கன்னுக்குட்டியை கண்டாலே காதவழி ஒடறா...' என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார். தாயாராம்மாள் எதிரில் வந்து நின்றார். "என்ன சாப்பாடு இருக்கா?” "இருக்குதுங்க." "மத்தியானம் செஞ்சதெல்லாம்...?” "அதெல்லாம் இல்வீங்க..." "இறால்கூட இல்லையா?” "கொஞ்சம் இருக்குதுங்க." "சரி, போடு போடு!" தாயாரம்மாள் சாப்பாடு பரிமாறினார். நான் கீழே அமர்ந்து சாப்பிட்டேன். பாவேந்தர் அருகில் இருத்த சாய்வு நாற்காலியில் அமர்ந்த வண்ணம், நல்லா சாப்பிடு. வெட்கப்படாதே.... ஆமா! நீயேன் விடுதியிலே சாப்பிடற? இங்கேயே வந்திடே. தினம் இங்கேயே சாப்பிடலாம்” என்றார். "பரவாயில்லைங்கையா! இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் போகமுடியாது” என்றேன் நான். "ஆமா! அங்கே விடுதிக்குக் கட்ற பணமும் வீணாயிடும். அப்ப ஒண்ணுசெய். அடிக்கடி வந்து சாப்பிட்டுவிட்டுப்போ' என்றார். நானும் சரி: என்றேன். - படுக்கையறையில் ஒரு மரக்கட்டில். அதன்மீது மெத்தை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அம்மெத்தையின் மீது அழகான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய விரிப்பு ஒன்றும் போடப்பட்டிருந்தது. அந்த விரிப்பின் வேலைப்பாடு என் உள்ளத்தைக் கவர்ந்தது. பாவேந்தர் கட்டிலில் படுத்திருந்தார். நான் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். பழைய காலத்து ஜி.இ.சி. மின்விசிறி ஒன்று மேசை மீது இரைச்சலோடு ஒடிக் கொண்டிருந்தது. "எனக்கு இரவில் துளக்கம் வருவதில்லை. பன்னிரண்டு மணிக்குத்தான் துரங்குவேன். இங்கிலீஸ் படத்துக்குப் போவமா?’ என்றார் பாவேந்தர்,