பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பாவேந்தருடன் வந்து உட்கார்ந்து, நடப்பு அரசியலைப் பற்றிய விவகாரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார். அவருடைய அரசியல் நண்பர்கள் செய்திகளைத் தாங்கிவரும் புறாக்களைப் போல் தொப்புத் தொப்பென்று அவ்விடத்தில் தோன்றுவார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் செய்திக்குத் தக்கவாறு சிலிர்த்துக் கொள்வார்கள். பாவேந்தர் அத்தகையவர்களைப் பார்த்து, ‘என்னா ஆசாரி சிலுத்துக்குது! என்ன விஷயம்? என்பார். 'அவன் என்னா நினைச்சுக்கினு இருக்கான் தெரியிலெ என்பார் ஆசாரி. அவன்! இன்றைய யார் அவன்? என்று தமக்கே உரிய பாணியில் கேட்பார் பாவேந்தர். நல்ல காலம். கையிலே அப்போ பரங்கு', இல்ல. இருந்தா தம்பி இந்நேரம் பெள்ளவாளிக்குப் போயிருப்பார்-இது ஆசாரியின் பதில். பாவேந்தர் அட! என்னாப்பா இவன் யாருன்னு சொல்ல மாட்டேன்கிறான்!” என்று மடக்கி எதிரி முகாமின் உள்நடப்புச் செய்திகள் பலவற்றை அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வார். அந்தக் கடையில் அவர் ஒருநாள் அரசியல் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது நான் ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போவதற்காக அவ்வழியே நடந்து சென்றேன். என்னுடன் ஒரு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது; கவிஞரைக் கண்டதும் கூட்டத்தை ஒதுக்கி விட்டு நான் அருகில் சென்று எனது வணக்கத்தைச் சொன்னேன். கூட்டத்திற்குப் போகிறேன் என்றேன். 'ஊம் போ போ! நல்லாப் பேசlன்னு சொன்னாங்க. நல்லாப் பேசுப்பா! நீ சொல்றதைத்தா ஜனங்க கேட்பாங்க, அந்த வெண்டைக்கா முதலி எல்லாம் இலக்கணத்தோட வெகு நல்லாத்தான் பேசுவாங்க. ஆனால், ஜனங்க கேட்க மாட்டாங்க. ஏன் தெரியுமா? நீ உண்மையைப் பேசற. ஒன்னு சொல்றேன் உனக்கு! மேடையில் ஏறினா உண்மையே பேசு. ஏன் தெரியுமா? உன்னிடம் படிப்பில்லை-பணமுமில்லை. அவனெல்லாம் படிப்பால தப்பிச்சுக்குவான். மற்றவன் பணத்தால் தப்பிச்சுக்குவான். நீ உண்மையாலதான் நிலைக்கணும் என்றார் பாவேந்தர். 1) பரங்கு-குத்துவாள். 2) பெள்ளவாரி-புதுச்சேரி சுடுகாடு