பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 - பாவேந்தருடன் உலாவப் போனோம். பார்த்தியாப்பா! தமிழுக்கு எவ்வளவு நல்ல காலம்! ஐம்பது.ரூபாய் கொடுக்கிறானே! என்றார். 'நன்றாய்ச் சொன்னீர்கள். அவர்கள் ரூபாய் 500/- கொடுத் திருப்பார்கள். உங்கள் கைக்கு வரும்போது அது ஐம்பதாகிவிட்டது. அதற்கே நீங்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்கள்” என்று நான் சொன்னேன். "சேசே அப்படியெல்லாம் இருக்காது-பாவேந்தருக்கும் படக்கம் பெனிக்கும் தொடர்பு ஏற்படுத்திய நபரின் பெயரைச் சொல்லிஅவன் அப்படியெல்லாம் செய்யமாட்டான்" என்றார். சில மாதங்கள் கழித்து ஒருநாள் "சுப்ரமணியம்! நீ சொன்னது சரி, அந்தப் படக்கம்பெனியிலிருந்து பாட்டுக்காக அவன் ரூ.500/- தான் வாங்கியிருக்கான். நம்ம கிட்ட ஐம்பதுதான் கொடுத்தான்" என்றார் பாவேந்தர். 米 1935ஆம் ஆண்டில் ஒருநாள் திடீரென்று எழுத வேண்டும் என்றார் பாவேந்தர். காகிதம் எழுதுகோல் கொண்டுபோய் வைத்தேன். எழுதிக்கொண்டே இருந்தார்; மதியம் உணவுக்குக்கூட எழுந்திருக்கவில்லை. சுமார் மூன்று மணிக்கு முடித்தார். ஓர் அழகான சிறுகதை உருவாகியிருந்தது. "இதை ஆனந்த விகடனுக்கு அனுப்பு" என்றார்; அனுப்பி வைத்தேன். 'அவன் அதை ஏதாவது போட்டானா?” என்று வாரா வாரம் விசாரிப்பார். இரண்டுவாரங்கள் கழிந்தன. 'அவன் அதைப் போடவில்லையென்றால் திருப்பி அனுப்பி விடச்சொல்லி எழுது” என்றார்; அப்படியே எழுதினேன். மீண்டும் ஒரு நினைவூட்டுக் கடிதமும் எழுதினேன். ஆனந்தவிகடனிடமிருந்து பதில் ஏதுமில்லை. அக்கதையை வெளியிடவுமில்லை. நினைக்கும் போதெல்லாம் பாவேந்தருக்குக் கோபம் வரும். ஏன் இப்படிச் செய்யறானுங்க! பாரதியார் எழுத்தை இப்படித்தான் பாழடித்தானுங்க!” என்பார் அவர். ஒரு வருடத்துக்குப் பின்னால் ஒரு நாள் காரசாரமாக ஆனந்த விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி, அவரே கைப்பட முகவரியும் எழுதி என்னிடம் கொடுத்து இதை அனுப்பு என்றார்: அனுப்பிவைத்தேன். ஒன்றிற்கும் பதில் இல்லை. பல வருடங்களுக்குப் பின்னால் கூட அதே நினைவுதான். அது அழகுணர்ச்சியோடு எழுதப்பட்ட காதல்