பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் . 373 கதை; ரோமியோ ஜூலியட் கதை போன்றது. காதலி புதைக்கப்பட்டதறகுப் பின்னால் காதலன் சமாதிக்கு வந்து கதறுவதும், தோண்டிப் பார்ப்பதும் அதன் பின் அந்த அழுகல் சதைக்கா, சீழுக்கா ஆசை வைத்திருந்தேன் என்று விரக்தியடைவதும் போன்ற கருத்துக்கொண்ட கதை. அற்புதமான வசனங்கள். ஆனந்த விகடனும் வெளியிடாமல் மற்றவர்க்கும் பயன்படாமல் போயிற்று ஒர் அழகுக் கதை. 米 புதுச்சேரியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் திருப்புளிசாமி ஐயா என்பவர் பெரிய தமிழ்ப் புலவர். பாவேந்தர் அவரிடம் தமிழ் பயின்றார். திருப்புளிசாமி ஐயாவின் மகன் கிருஷ்ணமூர்த்தி என் வகுப்புத் தோழன். பள்ளியை விட்டவுடன் அவன் சென்னைச் சித்திரச்சாலையில் சேர்ந்து நல்ல தேர்ச்சி பெற்றான்; சிலை வடிக்கும் கலையில் தனித்திறமை பெற்றான். "தலைப்பாகை இல்லாமல் பாரதியார் எப்படியிருப்பார்?’ என்று நான் கேட்ட போது, "தலை வழுக்கையுடன், முண்டாக இல்லாத பாரதி மிகவும் அழகாயிருப்பார். பாரதி முண்டாசு அணிந்ததே தலை வழுக்கையை மறைக்கத்தான்" என்றார் பாவேந்தர். அத்தகைய தோற்றத்தில் பாரதியின் உருவச்சிலை ஒன்றை அமைத்து விடவேண்டும் என்று எங்களுக்கு ஒர் ஆசை பிறந்தது. ரூ.500/- திரட்டிக் கிருஷ்ணமூர்த்திக்கு முன் பணம் கொடுத்தோம். சிலை வடிக்கும் பணி துவங்கியது. பாவேந்தர் காலையும் மாலையும் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப் போவார். சிலையின் முன்னேற்றத்தை மிகவும் அக்கறையோடு கவனிப்பார்; ஏதாவது மாறுதல் வேண்டுமென்றால் கூறுவார். பாரதியின் வழுக்கைத் தலைக்கு ஒரு மாதிரி (Model) தேவைப்பட்டது. பாவேந்தரின் நண்பர் குயில் சிவாவின் அண்ணன் திரு.சிவக்கொழுந்து நாயக்கரின் தலை ஏறக்குறைய பாரதியார் தலை மாதிரிதான் இருக்கும் என்று கூறினார் கவிஞர். வா. அவரிடம் போவோம் என்றார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி, பாவேந்தர், நான் ஆகிய மூவரும் சிவக்கொழுந்து நாயக்கர் வீட்டுக்குப் போனோம். வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த சிவக்கொழுந்து நாயக்கர் பாவேந்தரை வரவேற்றார். மூவரும் எதிர்த் திண்ணையில் அமர்ந்தோம். - பாவேந்தர், "அண்ணே இந்தத்தம்பி (கிருஷ்ணமூர்த்தியைக் காட்டி) திருப்புளிசாமி வாத்தியார் இருந்தாரே அவர் மகன்; சிலை செய்வதில்