பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 பாவேந்தருடன் மிகக்கெட்டிக்காரன் பாரதியார் சிலையைச் செய்துகிட்டிருக்கான். செத்த கொஞ்ச திரும்பேன்; தலையை மட்டும் காட்டேன்; வேறெதையும் காட்டாதே! (நகைத்தல்) உன் தலை பாரதியார் தலையாட்டம் இருக்குதாம்.’’ என்றார். நாயக்கர் சிரித்துக் கொண்டே திரும்பி உட்கார்ந்தார். கிருஷ்ணமூர்த்தி சில நிமிடங்களில் அவரது தலையின் வழுக்கைப் பகுதியை மிக அழகாகப் படம் பிடித்தது போல் எழுதிவிட்டான். சுமார் இரண்டு மாதங்கள் தினமும் காலையில் பள்ளிக்கூடம் போகும் போதும் 11.30க்குப் பள்ளிவிட்டுத் திரும்பி வரும் போதும் சிலையைப் பார்ப்பார். அந்தச் சிலையை உருவாக்குவதில், கவிதை எழுதும்போது சிகரெட் கூட ஊதாமல் எப்படி உணர்ச்சியின் உருவாய் இருப்பாரோ, அவ்வித உணர்வோடு இருப்பார். வேறு எதிலும் அவ்வித அக்கறை காட்டியதை நான் கண்டதில்லை. சிலைப்பணி நடந்து கொண்டிருந்த போது எனக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 18 மாதங்கள் சிறையில் கழித்து விட்டு நான் வெளியே வந்தபோது. அந்தச் சிலையைச் சக்தி கோவிந்தன் அவர்களுக்கு விற்று விட்டதாகக் கூறினார்கள். நான் வேதனைக் கடலில் ஆழ்ந்தேன். பாவேந்தரும் இவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கியது போய்விட்டதே என்று அங்கலாய்த்தார். அண்மையில் விசாரித்ததில் சிலை சக்தி கோவிந்தன் அவர்கள் வீட்டில் இல்லை என்று தெரிந்தது. காரைக்குடியில் யார் வீட்டிலோ பாரதியார் என்று தெரியாமல் ஓர் அலங்காரப் பொருளாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். புதுச்சேரித் தொழிலாளர் இயக்கத்தைத் தொடக்கத்திலிருந்து பாரதிதாசன் ஆதரித்து வந்தார். ஆலைத்தொழிலாளர்கள் பலர் திராவிடர்க் கழகத்தைச் சேர்ந்தவர்கள். கைத்தறி நெசவாளர்கள் பலர் திராவிடர்க் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ரோடியர் மில் தொழிலாளர்களின் தலைவர் திரு.சுந்தரராசு உறுதி மிக்க திராவிடர்க் கழகத்தவர். அரங்கேசன் என்பவரும் அப்படித்தான். திரு.அரங்கேசன் அடிக்கடி பாவேந்தரைச் சந்தித்து இயக்க நிலைமையை எடுத்துக்கூறுவார். தொழிலாளர் இயக்கத்தை எதிர்த்து வந்தவர்களைப் பாவேந்தர் பல வருடங்களாக எதிர்த்து வந்திருக்கிறார், நாங்கள் இளைஞர்கள் அனுபவமில்லாதவர்கள் நாங்கள் எங்கு ஏமாந்து விடுவோமோ என்ற கவலை அவருக்குண்டு. அந்நாளையத் தொழிலாளர் இயக்கத்தின் குறிக்கோள்