பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 பாவேந்தர்ஒரு நினைவுச் சரம் கவிஞர் சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவும் லியனார்டோ டாவின்சியும் கவிதை பாடத் தெரிந்த சிற்பிகள். பாலசுப்பிரமணியம் பாட்டையே சிற்பமாய்ப் படைக்கும் கவிஞர். இவர் தோட்டத்தில் நிலவுப் பூக்களும் உண்டு; நெருப்பு மலர்களும் உண்டு. ஒளிப் பறவையாய்ச் சிறகை விரிக்கும் உயர்ந்த கற்பனைகளுக்குச் சொந்தக்காரரான சிற்பி பாவேந்தரின் கடைசி கால நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார். 1954-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளி விழாக் கொண்டாடியது. அப்போது நான் தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவன். வணக்கத்துக்குரிய என் ஆசிரியரும், பாவேந்தரின் அன்பிற்குரிய மாணாக்கருமான கவிஞர் மு. அண்ணாமலை வாயிலாகப் புரட்சிக் கவிஞரைப் பற்றி (அப்போதெல்லாம் பாவேந்தரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.) நிறைய நிறையக் கேட்டு மகிழ்ந்த நான் அவரைக் கண்ணாரக் காணக் கொதித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வெள்ளிவிழாவையொட்டிப் பாவேந்தரின் கவிதையை மட்டுமே படித்து நிறைவு கொள்ள வேண்டியதாயிற்று. ஒரிரு மாதங்களில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்ய நேர்ந்தது. வெள்ளி விழாவில் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய பலருக்குச் சிறப்பு டாக்டர்