பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - - 381 தங்கியிருந்த நாட்களில், 1963 மே மாதத்தில் ஒரு நாள் நானும், என் நண்பர் மணிவாசகர் நூலகம் மெய்யப்பனும், இலக்கியப் பதிப்பகம் சோமையாவும் பாவேந்தருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய கவிஞர் பொன்னடியானுடன் பாவேந்தரைக் காணச் சென்றோம். என் முதல் கவிதைத் தொகுப்பான நிலவுப்பூ அச்சாகிக் கொண்டிருந்தது. அத்தொகுப்புக்குப் பாவேந்தரின் அணிந்துரைக் கவிதை பெற்றே தீரவேண்டுமென்ற கட்டாயம் எனக்கு. அதற்காகத்தான் பாவேந்தர் இல்லத்துக்குப் போனோம். நாங்கள் காத்திருக்க, கவிஞர் பொன்னடியான் பெரிய ஹாலில் தட்டி வைத்து மறைக்கப்பட்ட பகுதியிலிருந்த பாவேந்தரிடம் அனுமதி பெறச் சென்றார். நாங்கள் அழைக்கப்படுமுன் அறையில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டேன். பெரும்பாலான படங்களில் பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில் பாவேந்தரும், சிவாஜி கணேசனும் காட்சி தந்தனர். பாவேந்தரின் ஆசைக் கனவான பாண்டியன் பரிசு படம் வெளிவராத கதை பலருக்கும் தெரியுமே! விரைவில் நாங்கள் பாவேந்தர் முன்னால் அழைக்கப்பட்டோம். பத்தாண்டுகளுக்கு முன் கம்பீரமான தோற்றத்தோடு திகழ்ந்த கவிஞர் ஒரளவு சோர்வோடு காட்சியளித்தார். கட்டிலில் எழுதுகிற அட்டையோடு அமர்ந்திருந்தார். அவருடைய மாணவர் மு. அண்ணாமலையின் மாணவன் நான் என்றதும் "அப்ப. நீ என் பேரன்.." என்று சொல்லிக் கொண்டே என்னை அனைத்து நெற்றியில் முத்தமிட்டார். என் மேனி சிலிர்த்துப் பரவசமுற்றது. கவிழ்ந்து சாய்ந்து எழுதிக் கொண்டிருப்பது தம் வழக்கம் என்று சொல்லிப் புறங்கைளைத் தூக்கிக் காட்டினார். கருமையாக இரண்டு புறங்கைகளும் தழும்பு பாய்ந்திருந்தன. தமிழ்க் கவிதை முற்றத்தில் காலத்தால் அழிக்க முடியாத சுவடுகளைப் பதித்த பாவேந்தரின் கரங்களில் இருந்த தழும்புகள் யுத்தக்களம் சென்று வந்த போர் மறவனின் வீரத் தழும்புகளை எனக்கு நினைவூட்டின. பின்னர் அச்சாகியிருந்த கவிதைப் பகுதிகளை அவர்பால் தந்து அணிந்துரை வேண்டினோம். இரண்டு நாள் கழித்து வந்தால் படித்து விட்டு அணிந்துரை தருவதாகத் தெரிவித்தார். அந்தக் கவிதைத் சந்நிதானத்திலிருந்து வணங்கி விடைபெற்றோம். இரண்டு நாள் கழித்து-காலைப் பொழுதில் நானும் சோமையாவும் பலவகைக் கணிகளையும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு போனோம். இதெல்லாம் எதுக்கு... என்று சொல்லிய பாவேந்தர்