பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 385 பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது பாவேந்தர் துண்டை விரிச்சு கூட்டத்தில் தண்டனும் என்றார். தண்டல் என்ற சொல் எனக்கு அப்போது புதுமையாக ஒலித்தது; அதனால் சிரித்தேன். கவிஞர் கே.சி.எஸ். என்னைக் கடிந்து அப்படிச் சொல்வது; தென் ஆர்க்காட்டில் வழக்கு என்று தெரிவித்தார். பின்னர் பாவேந்தர் மறைந்த ஜீவா அவர்களின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜனசக்தி ஜீவா மலருக்குத் தாம் கவிதை கொடுத்திருந்தும் மலர் தமக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். அப்போது எங்களுக்கிருந்த வசதிக்குறைவில் கவிஞர் பெருமானைப் . புகைப்படம் எடுக்கக்கூட முடியவில்லை. ஆனால் அவரை அழைத்துச் சென்ற குமாரசாமிபிள்ளை கவிஞரையும் திருமதி பழனியம்மாளையும் அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். நண்பர் குமாரசாமிபிள்ளை பாவேந்தரைத் தம்முடன் அழைத்துச் சென்றபோது நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். பிறகு அவர் கவிஞரைக் கரூருக்கு அனுப்பி வைத்ததாக எங்களிடம் தெரிவித்தார். பாவேந்தர் மறைவுக்கு முன் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சிகளில் ஒன்று பொள்ளாச்சி நிகழ்ச்சி என்று கருதுகிறேன். வெகு விரைவிலேயே சென்னையில் உடல் நலிவுற்று அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி தாங்கமுடியாத அதிர்ச்சியாக வந்தது. இன்று எங்கள் ஊரில் பாவேந்தர் தங்கியிருந்த பயணியர் விடுதி இடிக்கப்பட்டு இல்லாமல் போய் விட்ட்து. ஆயினும் பாவேந்தர் அங்கு தங்கியிருந்த நினைவு அழியா ஒவியமாய் நின்று நிலைக்கிறது.