பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 பாட்டுக் குழந்தை பாரதிதாசன் மா. அண்ணாதுரை எம்.ஏ., பி.லிப்.எ.சி., பி.எட் அறிஞரின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்த இளைஞர் பாவேந்தரின் மாப்பிள்ளையாகிய திருவாளர் தண்டபாணியின் இளவல். அறிஞர்தம் இதய ஓடையை அணை கட்டிக் காக்கும் ஈரோடு கலைக்கல்லூரி நூலகர். இவரும் இவரது துணைவியும தமிழ்க் காதலர்கள். முனைவர் பட்டத்துக்குப் பாவேந்தரின் இதழ்ப் பணியை ஆய்வு செய்யும் இவர், தளர் நடைப் பருவத்தில் தமிழ்ப் பாவேந்தர் இல்லத்தில் வளர்ந்தவர். புதுவைக் கடற்கரையில் புரட்சிக் கவிஞர், இவருடன் குழந்தையோடு குழந்தையாக ஓடி விளையாடிய பிஞ்சு நினைவுகளைச் செஞ்சொல்லில் வடித்திருக்கிறார். பாவேந்தர் உள்ளக் குளத்தில் குளிர்ந்த தாமரை மலர்கள் பல, பூத்துக் குலுங்கித் தமிழ்ச் சோலையில் நறுமணம் பரப்பிக் கொண் டிருக்கின்றன. அம்மலர்களின் அழகையும் மணத்தையும் முழுமையாக உணரவேண்டுமானால் நாமும் அக்குளத்தில் படிதல் வேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் ஒர் உலகக் கவி. அவர் ஓர் ஊருக்கும், ஒரு நாட்டுக்கும் மட்டும் உரிமையுடையவரல்லர்.