பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 393 பாவேந்தரின் வாழ்க்கை தோண்டத் தோண்டக் குறையாத புதையலைப் போன்றது; இறைக்க இறைக்க ஊறும் ஊருணி போன்றது. அவரோடு பழகிய நாட்களில் என் நினைவில் நிலைத்த நிகழ்ச்சிகளை இங்கு விவரிக்க விரும்புகிறேன். Sk எங்கள் குடும்பம் அப்போது ஒரளவு செல்வச் சூழ்நிலையில் இருந்தது. இருந்தாலும் என் தந்தையாரின் உடன் பிறந்தாருக்குள் இருந்த சில கருத்து வேற்றுமைகளால் குழப்பமான சூழ்நிலையிலும் இருந்தது. நான்கு பக்கமும் கூடம் அமைந்தது எங்கள் வீடு. பாவேந்தர் ஏறுபோல் வீறுடன் நடந்து வந்து கூடத்தின் நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். எங்கள் குடும்பச் சூழ்நிலையை அவர் பொருட்படுத்தவில்லை. எங்கள் பொருளாதார வசதி, சொத்துவிபரம் ஆகியவை பற்றியும் கேட்கவில்லை. எங்கள் தந்தையின் பெருமிதமான தோற்றமும், என் அண்ணாரின் தோற்றப்பொலிவும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டன. எங்கள் குடும்பம் பண்பட்ட குடும்பமா, இல்லையா என்பதில் மட்டுமே அவர் கருத்தைச் செலுத்தினார். மாப்பிள்ளையை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் வெளிப்படையாகப் பேசிய பாங்கு எங்கள் குடும்பத்தாரைப் பெரிதும் கவர்ந்தது. நான் சிறுவனாக இருந்தாலும் மேல்பட்டாம் பாக்கத்தில், பெருமாள் கோவில் தெரு 177ஆம் எண்ணுள்ள எங்கள் இல்லத்தில் நடைபெற்ற என் அண்ணாரின் திருமணம் என் உள்ளத்தில் பசுமையாகக் காட்சியளிக்கிறது. பூவாளுர் அறிஞர் அ.பொன்னம்பலனார் தலைமையில் திருமணம் நடந்தது. வீதியை அடைத்துப் போடப்பட்டிருந்த பச்சைப் பந்தலில் நாதஸ்வர இசை ஒலிபெருக்கியில் முழுங்கத் திருமணம் தொடங்கியது. பல தமிழறிஞர்களும், சீர்திருத்தவாதிகளும் சொற்பொழிவாற்றினர். அந்தக் காலத்தில் சடங்குகள் இல்லாமல் செய்யப்படும் சீர்திருத்தத் திருமணத்துக்கு ஊர்மக்கள் நடுவிலும், உறவினர் நடுவிலும் பெரிய எதிர்ப்பு இருப்பது வழக்கம். இந்தத் திருமணத்திலும் அத்தகைய எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது நாடறிந்த செய்தி. எங்கள் குடும்ப நண்பராகிய திருக்கண்டேசுவரம் ரெட்டியார் ஊர் மக்களைப் பகைத்துக் கொள்ளலாமா? போயும் ப்ோயும் கழுநீர்ப் பானையில் வீழ்ந்து விட்டீர்களே! என்று என் பெரியப்பாவைக் கடிந்து கொண்டார்.