பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பாட்டுக்குழந்தை பாரதிதாசன் "இந்தத் திருமணத்தின் சிறப்பு இப்போது உங்களுக்குத் தெரியாது: பிற்காலத்தில் தான் தெரியும்” என்று எங்கள பெரியப்பா ரெட்டி யாருக்குப் பதில் கூறினார். அறிஞர் அண்ணா முதலமைச்சரானதும் முதல் வேலையாகச் சீர்திருத்தத் திருமணச் சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். இன்று சீர்திருத்தத் திருமணம் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எங்களுடைய தூரத்து உறவினராகிய நல்லாற்றுார்க் குமாரசாமி முதலியாரின் மனைவி விளக்கு இல்லாத திருமணம் திருமணமா? என்று கூறி என் அண்ணியாரை அடிக்க வந்தார். அங்கு இருந்தவர்கள் அவரைத் தடுத்து அப்போது அமைதியை நிலை நாட்டினார்கள். திருமணத்தில் மாலை மட்டும் மாற்றிக் கொள்ளப்பட்டது. எங்கள் அண்ணி வீட்டிற்கு வந்த பிறகு தமிழ் வாழ்க’ என்று பொறிக்கப்பட்ட பதக்கத்தோடு கூடிய தங்கச்சங்கிலியை அவருக்கு அணிவித்தோம். sk என் இளமைக் காலம் பெரும்பாலும் புதுவையில் கவிஞர் இல்லத்திலேயே கழிந்தது எனலாம். அந்நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நான் இப்போதும் எண்ணிப் பார்த்து மகிழ்வதுண்டு. வறுமையும் செழிப்பும் கவிஞர் குடும்பத்துக்குச் சகடக்கால் போல் சுழன்று வந்து கொண்டிருக்கும். ஆனால் கவிஞருக்கு வறுமையும் தெரியாது. செல்வ நிலையும் தெரியாது. வந்தவர்களை விருந்தோம்ப வேண்டும். அதில் அவர் ஊக்கமாக இருப்பார். இந்தப் பண்புதான் அவர் எழுதியுள்ள குடும்ப விளக்கில் விளக்கம் பெறுகிறது. தம் வீட்டின் வறுமையைப் பற்றிக் கவலைப்படாமல், பிறர் வறுமைக்கு வடிகாலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கவிஞர். கவிஞன் எந்தப் பொருளைப் பார்க்கிறானோ, அந்தப் பொருளாகவே தானும் மாறி விடுகிறான். என்னையும் என் அண்ணன் குழந்தைகளாகிய தமிழ்ச் செல்வம், பாண்டியன் ஆகிய இருவரையும் அடிக்கடி கவிஞர் வெளியில் அழைத்துச் செல்வார். நாங்கள் கடற்கரைச் சோலைக்கு (Botanical Garden)ச் செல்லுவோம். கப்பல்களின் வருகைக்கு சிக்னல் வழங்கும் இடத்துக்குக் கீழே அமர்வோம். நாங்கள் மணலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்போம். கவிஞர் சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்; கவிஞர்களுக்கே உரித்தான கற்பனை உலகில் நீந்திக் கொண்டிருப் பார். நாங்கள் பலமுறை தட்டி எழுப்பினாலும் சட்டை செய்யாமல் அமர்ந்திருப்பார். சில நேரங்களில் இதற்கு நேர்மாறாக எங்களுடன்