பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அந்தநாட்கள் அவர் பேச்சும் நடவடிக்க்ைகளும் எப்போதும் மற்றவர் கவனத்தைக் கவரும் படி இருந்தன. அவரோடும் பொன்னடியோடும் பேசிக் கழித்தேன். நடுப்பகல் உணவைக் கவிஞர் வீட்டிலேயே உண்டு விட்டு அங்கேயே ஒய்வெடுத்துக் கொண்டேன். துவக்க விழாவில் கலந்து கொள்ள ஒவ்வொரு கவிஞராக வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் சிற்றுண்டி வழங்கப்பட்டது. வந்தவர்களுள் நா.ரா. நாச்சியப்பன், அமீது, வல்லம் வேங்கடபதி, வேழவேந்தன், தமிழ்முடி, தமிழழகன், நாக.முத்தையா, பொன்னடியான், நாரான துரைக்கண்ணன், பாரதி சுந்தரம், சி. பாலசுப்பிரமணியம்", திருநாவுக்கரசு, செந்தாமரை, ஜமதக்னி, சகுந்தலா பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சதாவதானி ஷெய்குதம்பிப் பாவலரின் மகனும், செந்தாமரை என்னும் புனைபெயரில் எழுதி வந்தவரும், வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவருமான திரு. அமீது பாவேந்தரின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது பற்றித் தம் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். ஜமதக்னி என்பவர் இந்தியும் தமிழும் வல்ல ஒரு கவிஞர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். இந்தியில் உள்ள காமாயினி என்ற காப்பியத்தைக் 'காமன் மகள் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார். பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா பாரதிக்கு அப்போது வயது ஏறத்தாழ ஐம்பதிருக்கும். கண்பார்வை சற்று மங்கி இருந்தது. அதை அறிந்து பாவேந்தர் மிக வருந்தி, "நான் எடுத்து வைத்திருந்து வளர்த்த குழந்தை இவளுக்கு அதற்குள் கண்ணொளி கெட்டுவிட்டதே?” என்றார். சகுந்தலா பாரதியும் பாவேந்தரை அடிக்கொருதரம் 'மாமா! மாமா!' என்று அழைத்து அன்புக்கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் பாரதி எப்படி இருந்திருப்பார் என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். நன்றாகப் பழுத்த எலுமிச்சம் பழத்தின் நிறம்; ஒற்றை நாடி உடம்பு; உட்காருவது கூடப் பாரதி போலச் சப்பணம் போட்டு மார்பையும் தலையையும் நிமிர்த்து உட்கார்ந்திருந்தார், பேசுவதும் பாரதி போலவே வெடுக்கென்று பேசினார். மாலை 6 மணியளவில் அவரது கணவர் வந்து அவரை இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் பெருமன்றத் துவக்கவிழாவில் பாவேந்தர் பேச்சில் பொதிந்திருந்த கருத்துக்கள் பின்வருமாறு:

  • பாக்டர் சி.பாலசுப்பிரமணியம் இன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்