பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 விருந்து பாவலர் மணி சித்தன் இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் இராதா கிருட்டிணன். குயில் ஏட்டில் மருத்துவம் பற்றி இவர் பாடல்கள் எழுதியபோது, பாவேந்தர் இவருக்குச் சூட்டிய பெயர் சித்தன். திருவாவடுதுறைப் பதினெண் சித்தர் சங்கம் இவருக்கு வழங்கிய பெயர் 'பாவலர் மணி. கீட்ஸ் போல மருத்துவப் பட்டம் பெற்ற இவர். புதுவை அரசின் பொது மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரும்புப் பருவத்தில் இவருக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த பாவேந்தர், அரும்பு மீசைப் பருவத்தில் யாப்பிலக்கண ஆசிரியராகவும் இருந் திருக்கிறார். இவர் பாரதியின் பைந்தமிழையும், பால் ஸ்ாக்கின் பிரெஞ்சு மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். புதுவையில் உள்ள பல மன்றங்களுக்கு இவர் தலைவர்; செயலர், தொண்டர். 'இந்தியாவார் விக் காமராசர் முன்னால், இவர் 'குறிஞ்சி' என்னும் தலைப்பில் பாடியபோது, பாட்டரங்கத் தலைவர் பாவேந்தர் இவருக்கு வழங்கிய வாழ்த்துப்பா: வித்துவான் புதுவைச் சித்தர் இராதா இந்நேர மிங்கே நத்துவார்க் கெலாம் இனிக்க நறுங்குறிஞ்சித்தேன் பெய்தார். அத்தவக் கவிஞர் நன்னூல் ஆய்ந்தவர். தமிழ்க் காப்பாளர்.