பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 41 'உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்கள் எல்லாரையும் ஒன்றாகத் திரட்டி ஒரு பெரிய சக்தியாக உருவாக்குவது இம்மன்றத்தின் முதல் நோக்கம். அவர்கள் பாடல்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி நூலாக வெளியிட வேண்டும். அப்பாடல்களை ஆங்கிலத்திலும், பிற மொழி களிலும் பெயர்க்க வேண்டும். தில்லிக்கும், பிற மாநிலங் களுக்கும் தமிழே அறியாத சிலர் தாங்கள்தாம் தமிழ்க் கவிஞர்களின் முகவர்கள் என்று கூறிக் கொண்டு செல் கின்றார்கள். அத்தகைய வேற்று மாநில மன்றங்களுக்குக் கவிஞர் மன்றம் தனது முகவரை அனுப்ப வேண்டும்.” அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் சார்பில் திங்கள் இருமுறை இதழாகக் குயில் மீண்டும் துவக்கப்பட்டது. மன்றத்தின் குரலாக இக்குயில் கூவியது. 16 காசு விலை கொண்ட இந்த 16 பக்க இதழ் சென்னை இராமன் தெரு பாவேந்தர் இல்லத்தில் திருவள்ளுவராண்டு 1993 சித்திரைத் திங்கள் 2ஆம் நாள் (15.4.62) வெளிவந்தது. எட்டு இதழ்களோடு (1.8.62)இல் இதுதன் வரலாற்றை முடித்துக் கொண்டது. இந்த எட்டு இதழ்களும் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் தகுதிவாய்ந்த 21 இளங்கவிஞர்கள் படத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பாவேந்தரும் வாரந்தோறும் நிறைய எழுதினார். பாவேந்தரின் அன்புக் கட்டளையின் பேரில் அவருடைய பாடல்கள் மூன்றினை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன்; அவைகளும் வெளியாகியிருக்கின்றன. 1.8.62இல் வெளியான இறுதி இதழ்தான் பாவேந்தர் தம் வாழ்நாளில் கடைசியாக வெளியிட்ட கவிதை இதழ். இவ்விதழில் எழுதியுள்ள இளங்கவிஞர்களின் ஒவ்வொரு பாடலும், பாவேந்தரின் 'சிறப்புக் கவி' என்னும் அணிபூண்டு அழகுற வெளியாகியுள்ளன. இக்கடைசிக் குயில் வரிசையின் முதல் இதழ், திருமிகு தமிழகத் தலைநகர் ஆன சென்னையிற் பன்னுறு கவிஞர் சேர்ந்து அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன் த்தின் சார்பில் முத்தமிழ்ப் புத்தமிழ்து பாடுங் குயில் இது பதினைந்து நாட்கள் தேடுவார் அடையும் தேடருஞ் செல்வம் கலகக் கட்சிகளில்தலையிடாது வலிய வரும்சண்டையையும் விடாது குயிலின் கொள்கையும் குயிலை உடைய பெருமன்றத்தின் கொள்கையும் இதுவே என்று தன்னைத் தலையங்கத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டது. இத்தலையங்கத்துக்குக் காரணம் நானும், மன்றத் துவக்க விழாவுக்கு