பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 விருந்து உள்ளவர்களைப் பாதிக்குமே!’ என்ற அறிவு இல்லாது, சோறு அகப்பட்டால் போதும் என்று எண்ணுகின்றவன் சிந்தனை இல்லாத செக்குமாடு. இவனுக்குப் புத்தி புகட்ட வேண்டியது பெண்கள் கtடஒ10, உன் கணவன் அறியாமையாலோ அன்பாலோ ஒருவனை அழைத்து வந்து உணவிடச் சொன்னால் நீ துணிவோடு என்னாங்க, மணி ஒன்றாகிறது; இதுவரை அவர் சாப்பிடாமலா இருப்பார்? என்று ஒரு போடு போடு. வந்தவன் வேண்டாம்; நான் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லிக் கம்பி நீட்டுவான். தொலையட்டும் என்று விடு! அப்போதுதான் உன் கணவனுக்கும் அது உறைக்கும்! ஒரு வீட்டுக்குச் சாப்பிடச் செல்பவர் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாவது அறிவிப்புச் செய்து விட்டுச் செல்ல வேண்டும்! இந்தப்பழக்கம் மேலை நாடுகளில் உள்ளது; நமக்கும் வரவேண்டும். வந்த விருந்தை வரவேற்பது-வரும் விருந்தை எதிர்பார்த்திருப்பது. இன்றைக்கு இயலாத செயல்கள்! இன்றைய நாட்டு நிலையே வேறு." இது பாவேந்தர் மணமகனுக்கு மட்டும் வழங்கிய அறிவுரையன்று: எல்லாரும் கேட்டுணர வேண்டிய அறிவுரை. இது புதுமைக் கருத்து மட்டுமன்று! புரட்சிக் கருத்தும் அல்லவா?