பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 என் தந்தையின் நண்பர் செந்தமிழ்த் தொண்டர் சிவ. கண்ணப்பா பண்டிதமணி கதிரேசன் செட்டியார் புதுவைக் கூட்டத் தில் பாவேந்தரை அட்டைக் கிளாஸ் வாத்தியார்(துவக்கப்பள்ளி ஆசிரியர்) என்று கூறி அவமதித்ததற்காகக் கூட்டத்தில் இருந்தவர்கள் கிளர்ந்தெழுந்தனர். பண்டிதர் பாடு திண்டாட்டமாகி விட்டது. பாவேந்தரோடு பணிபுரிந்த மற்றொரு அட்டைக் கிளாஸ் வாத்தியார் திருவாளர் சிவகுருநாதன். அவருடைய மகன் சிவ. கண்ணப்பா இக்கட்டுரை ஆசிரியர். பாவேந்தரின் கம்பீரமான தோற்றத்தில் படிந்து மகிழும் பழக்கமுடைய இவர், பாவேந்தரின் பாட்டையும் பாடி மகிழ்ந்தவர். பாவேந்தரைப் பக்கமிருந்து பார்த்த இவர் அவருடைய பண்பு நலன்களை இக்கட்டுரையில் பாராட்டி மகிழ்கிறார். எனக்கு வயது பத்து இருக்கும். என் தந்தையார் சுயர் கூப்' பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். அவர் பெயர் சிவகுருநாதன். ஆனால் மக்கள் அழைப்பது அட்டைக் கிளாஸ் வாத்தியார். மிசியோன் பள்ளிக்கூடத்தில் - அதாவது இன்றைய வ.உ.சி. உயர்நிலைப்பள்ளியில் வரலாற்றுச் சிறப்புடைய விழா. மதச்சார்புடைய கல்வியை மதச்சார்பற்ற கல்வி என்று மாற்றியதைச் சிறப்பிக்கும் வகையில் விழா. மதச்சார்பற்ற கல்வியாக மாற்றிய பிரஞ்சுப் பெருமகனார் லுய்ல் ஃபெர்ரி (Jules Ferry) என்ற நல்லவர்.