பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 என் தர் பின் நண்பர் செந்தமிழ்த் தொண்டர் பாடிட்டா நாளைக்குப் பாரதிதாசனை யாரும் திட்டமாட்டாங் கல்லே! என்ற சொன்னார். புதுச்சேரியில் இருந்த படித்த பிராம்மணர்கள் பாரதிதாசனாரை எவ்வளவு மதித்தார்கள் என்பதன் ரகசியத்தை அன்று புரிந்து கொண்டேன். ஒருநாள் பாவேந்தர்தம் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த லெமேர் ராமசாமி ஐயரின் மகனைச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்தேன். பாவேந்தர் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை. ஐயர் வீட்டிலிருந்து நான் வெளியே வந்ததும், டேய் என்ற குரல் கேட்டது: திரும்பினேன். ஊர்ந்து வரும் குழந்தைபோல் கவிஞர்படுத்திருப்பதைப் பார்த்தேன். நான் பத்து வயதில் புன்சிரிப்போடு பார்த்த அதே முகம். நான் கவனிக்கலே-மன்னிச்சுக்குங்க என்றேன். 'அப்பா செளக்கியமா இருக்காராடா. நான் விசாரித்தேன்னு சொல்லு என்று சொன்னார். சொல்றேங்க என்று கூறி வணங்கி விடைபெற்றேன். அடுத்து என் தந்தையாரின் நண்பரைச் சந்தித்தது பிணக் கோலத்தில்தான்.