பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 தமிழ்தந்தசெல்வம் எங்கள் மாமா மன்னர் மன்னன் கூடத்தில் இருந்த தாத்தாவைப் பார்த்து, பெயர் ஏதாவது சொன்னால் மேரியில் பதிந்துவிடலாம்: என்று கூறியபோது தாத்தா உலாவத் தொடங்கினாராம்; அதாவது சிந்திக்கத் தொடங்கிவிட்டார் என்பது பொருள். கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்த என் பெரியம்மா சரசுவதி. "ஏம்பா, கண்ணகி என்று வைத்தால் என்ன?" என்று கேட்டபோது, “சரியில்லை அம்மா! கண்ணகி மிக உயர்ந்த குடும்பத்துப் பெண். அவள் படிப்பறிவுள்ளவளாக இருந்தும், வாழ்க்கை தொடங்கிய காலத்தில் இல்லையெனினும், தான் தொல்லைப் படப்பட, தன் அறிவைப் பயன்படுத்தித் தன் கணவனை எதிர்த்துப் போராடியிருக்கலாம். மாறாக கணவனை இழந்த பிறகே போராடுகிறாள். எனவே, அவளும் அழிந்தாள்; கணவனும் அழிந்தான்; நாடே அழிந்தது. அவளுடைய வாழ்க்கை என் பேத்திக்கு வேண்டாம். என் பேத்தி தமிழுக்குச் செல்வம்: தமிழ் தந்த செல்வம். எனவே தமிழ்ச் செல்வம் என்று தான் அவளை அழைக்க வேண்டும்; தமிழ்ச்செல்வி’ எனச் சொல்லக்கூடாது என்று கூறினாராம். தாத்தாவின் விருப்பப்படி தமிழ்ச் செல்வம் என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டது. 米 அறிவுரைகள் அடங்கிய சிறு சிறு கதைகள் எங்கட்குச் சொல்வி, எனக்கும் தம்பி பாண்டியனுக்கும் சிரிப்புக் காட்டித் தாமும் சிரிப்பார் எங்கள் தாத்தா. அதில் ஒர் ஊமையின் கதை. ஊமை ஒருவன் தோப்புக்கு மலங்கழிக்கச் சென்றான். அப்போது அவ்வூர்ப் பணக்காரன் ஒருவனும் சென்றான். பணக்காரனுக்குப் பின்னால் மலத்தில் ஒரு நாவற்பழம் விழுந்தது. ஊமையைக் கவனிக்காத பணக்காரன் நாவற்பழத்தை எடுத்து வேட்டியால் துடைத்து விட்டு வாயில் போட்டுக் கொண்டான். அந்நொடியில் ஊமை கைதட்டிச் சிரித்தபடி எதிரில் நின்றான். பணக்காரன் அதிர்ந்து போனான். பின்னர் ஊமை தானே என்று நினைத்து அவ்விடத்தை விட்டு நகர முயன்றபோது, ஊமை ஏளனச்சிரிப்புடன் சாடைக்காட்டி “ஊராரிடம் சொல்லப் போகிறேன்' என்றானாம். பணக்காரன் மிகவும் அஞ்சி ஊமையின் கைகளைப் பிடித்து கெஞ்சி, எவரிடத் திலும் சொல்ல வேண்டாம்; உனக்கு எது வேண்டுமானாலும் செய்கிறேன் என்று உறுதி கூறினான். ஊமை சிரித்துக் கொண்டே சென்று விட்டான். அன்று மதியம் மேற்படி பணக்காரனின் மிகப் பெரிய அரிசி மண்டிக்குச் சென்றான் ஊமை. அங்கே கடையினுள் அரிசியில்