பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 தமிழ்தந்தசெல்வம் நானும், என்னுடைய தம்பியும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். தலைமையாசிரியர் எங்களை நோக்கி வருகிறார். தமிழ்ச் செல்வம்... தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாமே!... பேப்பர்ல வந்திருக்கு... நீ தம்பியைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ...." தேர்வைத் தொடர்ந்து எழுத முடியாத ஏமாற்றம். தாத்தாவின் உடல்நிலை குறித்துத் திகைப்பு. வீட்டிற்குத் திரும்புகிறோம். தாத்தா இறந்த செய்தி காதில் நெருப்புத் துண்டமாய் விழுகிறது. மாலையில் தாத்தாவின் உடல் வேனில் வருகிறது: கலைஞர், கண்ணதாசன், டி.கே. சண்முகம் போன்றோர்கள் மலர் வளையம் வைக்கின்றார்கள். பிறகு யார் யாரோ வருகிறார்கள். போகிறார்கள்! உடல் முழுக்க மாலையால் மூடப்பட்டுள்ளது. நான் அழுது கொண்டே இருக்கிறேன். பலர் என்னைச் சூழ்ந்து கொண்டு. - 'யார் இனி உனக்கு வேண்டியதை வாங்கித் தருவார்? என்று கூறி அழுகின்றனர். பின்னர் என்னுடைய தாத்தாவின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் புதைக்கப்படுகிறது. ஆம். என்னுடைய ஆசைகளும் தான்.