பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 சுதும்பு மீன் திரு. ஆ. சுந்தரேசன் அச்சுக் கோப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் தலைவராக உயர்ந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அச்சுக்கோத்துக் கொண்டே அரிய எண்ணங்களைக் கோத்துச் சிறந்த எழுத்தாளராக மலர்ந்தவர் விந்தன். தம்முடைய அச்சகத்தில் அச்சுக் கோப்பவராக இருந்த இளைய சுந்தரேசனை இனிய கவிஞராக மாற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். பழனியம்மா அச்சகத்தில் பணிபுரிந்த காலத்தில் தம் உள்ளத்தில் கோத்த நினைவுகளை இக்கட்டுரையில் நிரல்படுத்திக் காட்டியிருக்கிறார் திருவாளர் ஆசுந்தரேசன். பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய எண்ண அலைகள் எத்தனையோ என் உள்ளத்தில் மோதிக் கொண்டிருந்தாலும், அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். பாவேந்தர் புதுவையில் பழநியம்மா அச்சகம் என்ற பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவி நடத்தி வந்தார். அந்த அச்சகத்தில் யான் ஐந்தாறு ஆண்டுகள் அச்சுக்கோப்பவராகப் பணிபுரிந்து வந்தேன். கவிஞர் அப்போது குயில் என்னும் பாட்டிதழ் ஒன்றைப் புதுவையிலிருந்து வெளியிட்டு வந்தார். அவ்விதழில் உள்ளூர் வெளியூர்க் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறப்பிடம் தந்து கவிதைகள் வெளியிட்டார். அச்சுக் கோப்பவராக இருந்த எனக்கும், நாள்தோறும் கவிதைகளை அச்சுக் கோத்த காரணத்தால், கவிதையுணர்வு பற்றிக் கொண்டது. கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னை நாள்தோறும் உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது.