பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 பிற்சேர்க்கை பிற்சேர்க்கை நான் சந்தித்த பாவேந்தரின் நண்பர்கள் எல்லாருமே ஒரு கட்டுரையாகத் தொகுக்கும் அளவுக்குச் செய்திகளைக் செய்திகளை மட்டுமே நினைவு கூர்வர். அச்சிறுசிறு செய்திகளை அரும்பு மாலையாகத் தொடுத்திருக்கிறேன். 1. பெண்மயில் கொத்தும் 1963-ஆம்ஆண்டு, சென்னை செயிண்ட் மேரீஸ் ஹாலில் இலக்கிய விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஓர் அவசர அலுவல் காரணமாகச் சென்னை சென்றிருந்த நான், விளம்பரத் தட்டியை வெளியில் பார்த்தவுடன் உள்ளே நுழைந்து விட்டேன். பாவேந்தர் மேடையில் அமர்ந்திருந்தார். கவிஞர் செளந்தரம் கைலாசம் பேசிக் கொண்டிருந்தார். பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் மயில்’ என்னும் தலைப்பில் உள்ள பாடல் குறிப்பிடத்தக்கது. அஃதோர் அங்கதப் பாடல் (Satire). எப்போதுமே பெண்கள் அண்டை அயலார் விவகாரங்களை அறிந்து கொள்வதிலும், அவற்றைப் பலர் கூடி விமர்சிப்பதிலும் ஆர்வமுடையவர்கள். இக்குறையைப் பாவேந்தர் இப்பாடலில் மிகவும் நயம்படக் கேலி செய்திருக்கிறார். இயற்கை அன்னை கலாப மயிலுக்கு நீண்ட கழுத்தையும், பெண்களுக்குக் குட்டைக் கழுத்தையும் கொடுத்திருக்கிறாள். ஏன்?" என்று ஒரு வினாவை எழுப்பி அவரே அதற்கு விடையும் கூறுகிறார். அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்பதற்கே இயற்கை அன்னை, இப்பெண்கட் கெல்லாம் குட்டைக் கழுத்தைக்கொடுத்தாள் உனக்கோ