பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் s 幽 . 431 கறையொன்றில்லாக் கலாப மயிலே நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்: திருமதி செளந்தரம் கைலாசம் இப்பாடலை நயமாகப் பாடி விளக்கி விட்டுக் “கவிஞர் இப்பாடலைத் துணிந்து பாடியிருந்தாலும், இக்குற்றச்சாட்டைப் பெண்கள் கேட்டால் எங்கு கோபித்துக் கொள்வார்களோ?" என்ற அச்சமும் அவருக்கு இல்லாமல் இல்லை. அதனால் தான் மயிலை மெதுவாக அருகில் அழைத்து இங்குவா உன்னிடம் இன்னதைச் சொன்னேன் என்னை ஏசும் என்பதற்காக என்று கூறுகிறார். இந்த வரிகளில் உள்ள ஓர் இனிய நயத்தை நீங்கள் உணர வேண்டும். கவிஞர் இந்தக் கருத்தைக் கூறியது யாரிடம்? பெண்மயிலிடமா? இல்லை. கலாப மயிலிடம். பெண் மயிலிடம் இக்கருத்தைச் சொல்லி இருந்தால் நிச்சயம் அது கோபங்கொண்டு ‘எங்கள் இனத்தையா குறை கூறுகிறீர்? என்று கூறிக் கவிஞரைக் கொத்தியிருக்கும்" என்று கூறினார். கைதட்டலினால் செயிண்ட் மேரீஸ் ஹாலே அதிர்ந்தது. பாவேந்தர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். - பாவேந்தர் பிறகு பேசும்போது, இவ்வளவு நயம் இந்தப் பாடலில் இருக்கிறதென்று நான் இப்போதுதான் அறிந்து கொண்டேன் என்று உள்ளம் மகிழ்ந்து திருமதி செளந்தரம் கைலாசத்தையும் பாராட்டினார். பின் தமது பேச்சில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், அறிஞர் அண்ணாவைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சில கருத்துக்களை வெளியிட்டார். அடுத்த நாள் காலை நான் தி.நகர் இராமன் தெருவில் இருந்த பாவேந்தர் இல்லத்துக்குச் சென்றேன். முதல் நாள் இலக்கிய விழாவில் அவர் வெளியிட்ட சில கருத்துக்களைப் பற்றி அவரிடம் உரையாடினேன். திரு.வி.க.வின் கவிதையாற்றல் பற்றிப் பேச்சு எழுந்தது. அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டார். திரு.வி.க. சிறந்த தமிழறிஞர். அவர் உரைநடையில் சாதித்ததை இன்னும் எந்தத் தமிழனும் சாதிக்கவில்லை என்றாலும், அவர் கவிதையின் பக்கம் சென்றிருக்கக் கூடாது. அண்ணாவைப் பற்றி அவர் பாடிய பாடல் கவிதைத் துறையில் அவர் அடைந்த தோல்விக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.