பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பிற்சேர்க்கை அண்ணாத் துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டின் வண்ணான் அழுக்கெடுப்பில் வாய்மொழியில் பண்ணாவான் சிற்பன் எழுத்தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென் றாடு. இந்த வெண்பா அண்ணாவைப் பாராட்டித் திரு.வி.க. எழுதியது. 'வண்ணான் என்ற உவமை இடத்திற்கும், தகுதிக்கும் ஏற்பப் போடப்பட்ட நாகரிகமான உவமையன்று. இந்த உவமையால் அண்ணாவுக்கும் பெருமையில்லை; வண்ணானுக்கும் பெருமை யில்லை. எதுகை சரியாக விழவேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு எந்தச் சொல்லை வேண்டுமானாலும் போடக்கூடாது. பொறுமையாகச் சிந்தித்து நல்ல உவமையாகப்போட வேண்டும். திரு.வி.க. கவிஞராக இருந்திருந்தால் இப்பாட்டின் அடிகளை அவர் இப்படி அமைத்துப் பாடியிருப்பார்” என்று சொல்லி அவரே ஒரு வெண்பாவை உடனே சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எழுதி, அவரிடமே காட்டித் திருத்திக் கொண்ட பாடல் பின்வருமாறு: எண்ணாத் துறைநாடி ஏந்துபுகழ் நட்ட அண்ணாத் துரையண்ணல் ஆய்ந்து தமிழ் செழிக்கப் பண்ணாத் துறையுண்டோ? பைந்தமிழர் ஏனிவனைக் கண்ணாகக் கொள்ளார் கனிந்து மேலும் அவர் தொடர்ந்து வகையுளியை எவன் சரிவர உணர்ந்து யாப்பில் கையாளுகின்றானோ, அவனே கவிதையில் வெற்றி பெறுவான். ஒவ்வொரு சீரும் சொற்கள் உடைபடாமல் கருத்து முற்றி நிற்கும்படி வண்ணம் அறுக்க வேண்டும். அத்தகைய கவிதை தான் படிப்பவர் நெஞ்சில் நிற்கும். இராமலிங்க அடிகள் இதில் வல்லவர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே! களிப்பருளுங் களிப்பேl நலங் கொடுக்கும் நலமே! பாட்டு என்றால் இப்படி இருக்க வேண்டும்” என்று சொன்னார். பிறகு கொஞ்ச நேரம் ஏதோ சிந்தித்துவிட்டு, “நீ ஒட்டக்கூத்தன் பாட்டு படிச்சிருக்கறயா?" என்று கேட்டார். "தனிப்பாடல் திரட்டில் சில பாடல்கள் படித்திருக்கிறேன்" என்று நான் சொன்னேன். முென்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புகள் நிற்புழியறிந்து குற்றப்புடாமல் வண்ணம் அறுத்தல்.

ാ&sണ്ട്