பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அந்தநாட்கள் துஷ்யந்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். ஆனால் நாடகம் நடக்கவில்லை. சகுந்தலை நாடக ஒத்திகை நடந்தபோது இந்தப் பெண் பிறந்ததால் இவளுக்கும் சகுந்தலை என்று பெயர் வைத்தார் பாரதி” என்றார் பாவேந்தர். அதன் பிறகு கவிஞர்கள் வாணிதாசன், சுரதா, பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம், மு. அண்ணாமலை ஆகியோரைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. இந்நால்வரைப் பற்றியும் மிகவும் சுருக்கமாகச் சொல்லிச் சட்டென்று முடித்துக் கொண்டார். "வாணிதாசனுக்கு வயது நாற்பதிருக்கும். சொந்த ஊர் சேவியமேடு, நான் பிரெஞ்சு அரசாங்கப் புலவர் தேர்வுக் குழுத்தலைவனா இருந்தப்போ, இவனும் தேர்வு எழுதினான். நான் வேலையிலே இருந்த கல்வே கல்லூரியிலே இவனும் தமிழாசிரியனா இருந்தான். நடுவிலே கல்லூரிலே கொஞ்சம் குறும்பு பண்ணிட்டா. அதனாலே சொந்த ஊரான சேவியமேட்டுக்கே மாத்திப்புட்டாங்க. முதலில சின்னச் சின்னதாக் கவிதை எழுதிக்கிட்டு வந்து காட்டுவான். நாந்தா திருத்திக் கொடுப்ப. நானே ஒரு சாற்றுக்கவி. அவன் பாட்டுக்கு எழுதிப் பத்திரிகையிலே போட்டு விளம்பரப்படுத்தினேன். அவன் கவிதையில் புதிய கற்பனை ஒரு எழுச்சி இல்லை. என்னை அப்படியே பின்பற்றி எழுதுவான். நல்லாத்தா இருந்தா. கட்சி பிரிஞ்சப்போ இந்தக் கண்ணிர்த்துளிப் பசங்க கூட இவனும் சேர்ந்துட்டா, அப்பறம் இந்தப்பக்கம் வராதடான்னுட்ட. இருந்தாலும் வருவா. கொஞ்சம் நன்றி உணர்வுள்ளவ. இன்ப இரவுன்னு நான் நாடகம் ஒன்னு நடத்திக்கிட்டு இருந்தப்ப அதிலே சுரதா நடிச்சுக்கிட்டு இருந்தான். என் பாடல்களைப் பேர்த்து எழுதுவான். பாண்டியன் பரிசை அவந்தா பேர்த்து எழுதினான். எழுத்து மணி மணியா இருக்கும். கொஞ்சம் துணிச்சலானவ. "பட்டுக்கோட்டை கலியாணசுந்தரமும், மு.அண்ணாமலையும் கொஞ்சநாள் எங்கிட்ட புதுச்சேரியிலே இருந்தாங்க. இரண்டுபேரும் என் பாட்டைப் பேர்த்து எழுதுவானுங்க. பட்டுக்கோட்டை இருக்கானே ரொம்ப அமைதி. என் எதிரிலேயே பயபக்தியோட வாய் கூடத் திறக்காம உட்கார்ந்திருப்பான். என்கிட்ட அளவு கடந்த மரியாதை. எதை எழுதினாலும் பாரதிதாசன் வாழ்கன்னு மேலே போட்டுட்டுத்தா எழுதுவான். அவன் இவ்வளவு வேகமா வளருவான்னு நான் அப்ப நெனைக்கல. அந்த அறிகுறி எதுவும் அப்பத் தென்படல." மாலையில் கவிஞர் மன்றத் துவக்க விழாவில் அவர் பேசிய கருத்துக்களின் மீது எங்களுடைய பேச்சுத் திரும்பியது.