பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர் o e o 437 காணவில்லை; ஒரு கவிஞனைக் கண்டேன். செல்லப்ப ரெட்டியார் எங்கள் மூவருக்கும் டிக்கட் எடுத்தார்". 5. பழம்பால் சாப்பிடுவார் ஒருமுறை பெரம்பலூரில் கவியரங்கம் ஒன்றிற்குத் தலைமை தாங்கிவிட்டுப் பேருந்தில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். இளங்காலைப்பொழுது என் அருகில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். பேச்சுவாக்கில் அவர் ஒரு தமிழ்ப் புலவர் என்று அறிந்து கொண்டேன். பின்னர் அவரோடு பேச்சுக் கொடுத்ததில், மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் புலவர் துரைசாமி ஐயா அவர் என்பதை அறிந்து கொண்டேன். எங்கள் இருவரின் பேச்சு பாரதிதாசன் பக்கம் திரும்பியது. அவர் பாவேந்தர் பற்றிய பின் கண்ட செய்திகளைக் கூறினார். "பாரதிதாசனை எனக்கு இளமையிலிருந்தே தெரியும். இளமையில் அவர் சிறந்த முருகபக்தர். மயிலம் முருகன் கோவிலுக்கு வருவார். மயிலம்கோவில் முருகன் ஆண்டுதோறும் மாசி மகவிழாவின்போது புதுவைக்கு எழுந்தருளுவது வழக்கம். வழியில் வானுர்க் கோவிலில் முருகன் தங்கிச் செல்வது வழக்கம். நானும் உடன் சென்றிருந்தேன். வானுர்க் கோவிலுக்கு வெளியில் பாரதிதாசன் நின்று கொண்டிருந்தார். நான் அழைத்ததும் உள்ளே வந்தார். அக்கோவில் ஐயர் பூசையை முடித்துத் தீபாராதனை செய்யும்போது வெளியிலே சென்று விட்டார். நான் ஏன்? என்று அவரைக் கேட்டேன். "கோவில் உமது தானே? நீரே பூசை செய்தால் என்ன? (அங்கு பூசை செய்த ஐயரைக் காண்பித்து) அவன் கையில் திருநீறு வாங்க என் மனம் ஒப்பவில்லை" என்று பதிலிறுத்தார் பாரதிதாசன். ஒருமுறை பெங்களுரில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. டாக்டர் இலக்குவனார், புலவர் குழந்தை, டாக்டர் இராச மாணிக்கனார், பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரிமேலழகர் உரையில் உள்ள குறைகள் பற்றி நான் பேசினேன். பரிமேலழகர் உரையை முதலில் மறுத்தவர் சிவப்பிரகாசர் தாம் என்பதை நான் என் பேச்சில் எடுத்து விளக்கினேன். இலக்குவனாரும், இராசமாணிக்கனாரும் என்னுடைய கருத்தைத் தமது உரையில் பாராட்டிப் பேசினர். பாரதிதாசன் தமது பேச்சில் சைவ மடங்களைச் சாடினார். இலக்குவனாரும் இராசமாணிக்கனாரும் அதைக் கேட்டு வருந்தியதோடு, பாவேந்தரிடம் மடங்களைத் தாக்கிப் பேசவேண்டாமென்று கேட்டுக் கொண்டனர். பாரதிதாசன் பழகுவதற்கு ஏற்ற நல்ல நண்பர். நானும் அவரும் சந்திக்கும்போது நகைச்சுவையோடு பேசி மகிழ்வோம். ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர்கள் எல்லாம்