பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A38 பிற்சேர்க்கை கூடியிருந்தோம். பாவேந்தர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடுவார். நான் இரவில் பாலும் பழமும் மட்டும் சாப்பிடும் பழக்கம் உடையவன். கூட்டத்தில் எல்லாருக்கும் விருந்து பரிமாறப் பட்டிருந்தது. என்னை ஒருவர் வந்து சாப்பிட அழைத்தார். அருகில் இருந்த பாரதிதாசன் இரவில் இவர் பழம்பால்தான் சாப்பிடுவார்; எங்காவது கிடைத்தால் பாருங்கள் என்று சிலேடை நயம் பொருந்தக் கூறினார். புலவர் கூட்டம் கொல்லென்று சிரித்தது". 6. எனக்கெதற்குக் குதிரை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாவேந்தர் திரைப்படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரோடு பழகிய நண்பர்கள் பலதரப்பட்டவர்கள். அரசியல்வாதிகள், புலவர்கள், வணிகர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என்று பட்டியல் நீளும். சேலம் அரிசிப் பாளையத்தில் வாழ்ந்த ராஜகோபால் என்ற இளைஞர் பாவேந்தரிடம் அளவு கடந்த அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார். நான் அந்த இளைஞரை 1965ஆம் ஆண்டு வாக்கில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. கவிஞர்கள் எப்போதும் உணர்ச்சிவயப்படுபவர்கள். அந்தந்த நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப அவர்கள் பேச்சும் செயலும் அமைந்திருக்கும்; பின் விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க மாட்டார்கள். உணர்ச்சி வயப்பட்ட அவர்கள் நடவடிக்கையால் அவரோடு தொடர்பு கொண்டவர்களும் பல சங்கடங்களுக்கு ஆட்பட நேரிடும். தம் வாழ்வில் ஏற்பட்ட இத்தகைய சங்கடம் ஒன்றை, அந்த இளைஞர் குறிப்பிட்டார். "பாவேந்தர் சேலத்தில் இருந்தபோது அவரை அடிக்கடி நான் காணச் செல்வதுண்டு. செர்ரி ரோட்டிலுள்ள மாடர்ன் கேஃபில்’ அறையெடுத்துத் தங்கியிருப்பார். சில சமயங்களில் சீரங்க பாளையத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ரிஹர்சல் ஹால் கட்டிடத்தில் தங்கியிருப்பார். அவர்மீது எனக்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரைப் போய்ப் பார்ப்பதும், பேசுவதும் எனக்கு இனிய பொழுது போக்காக இருந்தது. - அப்போது என் சொந்த உபயோகத்துக்கு ஒர் அழகான குதிரை வண்டி வைத்திருந்தேன். குதிரையும் நல்ல ஜாதிக்குதிரை. அந்த நாளில் குதிரைவண்டி வைத்திருப்பது ஒருவகை நாகரிகம். பாவேந்தர் நான் செல்லும் போதெல்லாம் குதிரையை மிகவும் விருப்பத்தோடு பார்ப்பார்; அன்போடு தடவிக் கொடுப்பார். ஒருநாள் அவர் என்னைப் பார்த்து ராஜகோபால் இந்தக் குதிரை