பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 443 தித்திக்கும் கவிதையென்னும் கனியை யுண்ணச் சிறகைவிரித் தமர்ந்ததுவோ? சோலை தன்னில் தித்திக்கும் மலைத்தேனைத் தெவிட்டி வந்து தீங்குரலின் கருவண்டுக் கூட்டம் ஒன்று தித்திக்கும் இலக்கியத்தேன் பருகு தற்கும் திருவாயில் படிந்ததுவோ?’ என்று கேட்டேன். அழகேறி ஆட்சிசெய்த மீசை தன்னை அன்போடு மெதுவாகத் தடவி விட்டுப் "பழகுதமிழ்ப் பெரும்புரட்சிப் பார திக்குப் பற்பலரால் இடையூறு நேர்ந்த போது கிளர்ந்தெழுந்த மீசையிது தமிழ்ப்ப கைச்சொல் கேட்டவுடன் துடிப்பதிது" என்று சொல்லி மழைத்தமிழன் எழுந்துசென்றான் முழங்கு கின்ற மதயானை அவன் நடைக்குத் தோற்ற தங்கே. கொடிகட்டி உலகாண்ட ஆங்கி லேயர் குலத்துதித்த மறப்புலவன் ஷாவைத், தேனை வடிகட்டிக் கவிதையென ஆக்கித் தந்த வங்கத்துத் தாகூரைப் பணத்தி மிர்க்கு வெடிவைத்த தால்ஸ்தாயை எண்ணும் போது வெண்தாடி நம்கண்ணில் அசைந்து தோன்றும், படிமெச்சும் பாரதிக்குத் தாசன் தன்னைப் பைந்தமிழர எண்ணுங்கால் மீசை தோன்றும். 2. டாக்டர் காமில் ஸ்வலபில் கடிதம் (49ஆம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) Thiru Bharthi Dasan Avargal' 95, Rue de Perumal Kovil, Puduchcheri-Pondichery. Dear Mahakavi, I send enclosed herewith an issue of our Novy'New Orient Monthly/wherein you will find a few of my CZECH translations of your splendid poems together with a short note on your life and work. May I ask you to kindly arrange for the despatch of your collected work to me? For me and my students of Tamilitis a "must"-your work is undoubtedly the peak of Tamil lyrical poetry in the first half of our century. Yours very sincerely, Dr. Kamil Zvejebil, தமிழ் ஊழியன்