பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அந்தநாட்கள் குடிச்சுப்புட்டு வீதியிலே வரமாட்டா. அப்படி எவனாவது குடிச்சுப் புட்டு வீதியோரத்திலே உருண்டு கிடந்தான்னா அவ புதுச்சேரிக்கார அல்ல சேலத்துக்கார" என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தார். நானும் சிரித்துவிட்டு எழுந்து வந்து படுத்துக் கொண்டேன். 30.1.62 இரவு மணி ஏழு இருக்கும். கவிஞர் இல்லம் சென்றேன். கட்டிலில் கவிஞர் படுத்திருந்தார். நான் நேராக அறைக்குள் சென்றேன். தலையைச் சாய்த்து என்னைப் பார்த்து வா' என்றார். நான் நாற்காலியில் அமர்ந்தேன். கவிஞர் ஏதோ சிந்தனையில் இருந்தார். நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேசாமல் எழுந்து வந்து 'ஏன் இன்று கவிஞர் ஒரு மாதிரியாக இருக்கிறார்?' என்று பொன்னடியிடம் கேட்டேன். "யார் கண்டது? சித்தம் போக்கு! சிவன் போக்கு! நமக்கென்ன? நாம் போய் சாப்பிடலாம் வாங்க!” என்று கூறிச் சிரித்தார் பொன்னடி. பொன்னடியும் நானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டோம். காலை 6 மணிக்கு நான் கண்விழித்து எழுந்தபோது, கவிஞர் வீட்டில் இல்லை. நானும் சைதாப்பேட்டை புறப்பட்டேன். உந்து வண்டி ஏறுவதற்காக நான் தேனாம்பேட்டை நாற்சந்திக்குச் சென்றபோது பாவேந்தர் அங்கு பாதையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் உள்ளத்தை மிகவும் வருத்தியது. நான் அருகில் சென்று, 'ஏனய்யா இங்கு நின்று கொண்டிருக்கிறீர்?' என்று கேட்டேன். - "ஆமாம்! நிற்க முடியவில்லை. கால் கடுக்கிறது" என்று சொன்னார். உடனே அருகில் இருந்த பெட்டிக்கடையில் ஒரு பெட்டி வாங்கி அதன் மீது கவிஞரை உட்கார வைத்தேன். கவிஞர் ஒரு வெண் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு அதன் மீது உட்கார்ந்தார். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த கோவிந்தராசன் என்ற நண்பரைக் காட்டி, "இந்த மடையன் என்னை வீட்டிலிருந்து நடக்கவிட்டே கூட்டிக்கிட்டு வந்தா” என்று வருத்தத்தோடு சொன்னார். “எந்த ஊருக்குப் புறப்படுகிறீர்?" என்று நான் கேட்டேன். 'குடியேற்றம் (குடியாத்தம்) போற. இராசகோபால் நாயுடு குடியேற்றம் காங்கிரஸ் வேட்பாளர். அவரை ஆதரிச்சுத் தேர்தல் கூட்டத்திலே பேசறத்துக்காக போற" என்றார் பாவேந்தர்.