பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அந்தநாட்கள் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கிறார்; நுட்பமானவர். எதைப் பேசினாலும் ஈடுபாட்டோடு பேசுவார். உடனிருந்த இசை யமைப்பாளர் யாரென்று நினைவில்லை. "கட்சி அரசியல் உங்களுக்கு வேண்டாம்; நீங்கள் தமிழர்க்குப் பொதுவானவர்" என்று நான் பாவேந்தருக்கு அடிக்கடி கூறுவதுண்டு. நான் கூறும்போது அவரும் சரி என்று கூறுவார். ஆனால் வாய்ப்பு நேரும்போது மிகவும் தீவிரமாக அரசியல் பேசுவார்; எழுதுவார். கவிஞர் தஞ்சைவாணன், கோவிந்தராசன் போன்றவர்கள் அவரைக் கட்சி அரசியலில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். அப்போது தி.மு.க.விலிருந்து சம்பத் பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியைத் துவக்கி 62 தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம். 'சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கப் போகிறேன்' என்று முழக்கமிட்டுச் சென்னை நகரில் சம்பத் ஆர்ப்பாட்டமான தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். சென்னை நகரம் எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வரவேற்பு வளைவுகளோடு விழாக் கோலந் தாங்கிப் புதுமணப் பெண் போல் காட்சியளித்தது. தமிழ்த் தேசியக் கட்சியின் போர் ஆரவாரத்தைக் கேட்டு, வெளியிலே காட்டிக் கொள்ளாத குலைநடுக்கத்தோடு தி.மு.க. இருந்த நேரம். பாவேந்தரைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகச் சம்பத்தின் துதுவராகத் தஞ்சைவாணன் வந்திருந்தார். வந்த வேலையையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பாவேந்தரின் இசைவோடு தஞ்சைவாணன் விடைபெற்றார். படித்துப் பட்டம் பெற்ற, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட இளைஞர்களைக் கண்டால் பாவேந்தருக்கு மிகவும் பிடிக்கும். பட்டதாரி இளைஞர்களைத் தம்முடன் அழைத்துச் செல்வதிலும், அவர்களை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதிலும் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. என்னை மற்றவரிடம் பெரிய கவிஞர், புரொபசர் என்று அவர் வாயால் கூறி அறிமுகப்படுத்தும் போது நான் மிகவும் வெட்கப்படுவேன். பாவேந்தர் தனியாக இருக்கும் போது "ஐயா! நான் பெரிய கவிஞனுமில்லை; புரொபசருமில்லை; என்னை ஏன் அளவுக்கு மீறி உயர்த்திக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்பதுண்டு. உடனே, "நீ சும்மா இரு! உனக்கென்ன?’ என்று கூறி அடக்கி விடுவார். கவிஞர் தஞ்சைவாணன் சென்ற பிறகு, நானும் பாவேந்தரும் சாப்பிட அமர்ந்தோம். மீன் குழம்பும் உப்புக் கண்டமும் இலையில்