பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ll * ர்-ஒருப e z - 49 பரிமாறப்பட்டன. நாள்தோறும் மீன் இல்லாமல் பெரும்பாலும் சாப்பிட மாட்டார். புதுச்சேரி கடற்கரை நகராகையால் மிகவும் மீன் மலிவாகக் கிடைக்கும். புதுவை வாசியான பாவேந்தருக்கு மீன் அன்றாட உணவாகிவிட்டது. மீனின் சினையை விரும்பிச் சாப்பிடுவார். இலையில் பொரித்து வைக்கப்பட்டிருந்த மீன் சினை என்னவென்றே எனக்குப் புரியவில்லை. நான் தடுமாறுவதைப் பார்த்த பாவேந்தர், "என்ன விழிக்கிற? மீனோட சினை. ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிடு" என்றார். நானும் சாப்பிட்டேன். இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி "இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்கலாம்” என்று கேட்டார். அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக் கறியாகத் தெரிவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான்கறியாக இருக்கும் என்று நினைத்து, "மான் கறியா?” என்றேன். உடனே பாவேந்தர் "இல்லை. புலிக்கறி," என்றார். எனக்குத் துக்கி வாரிப் போட்டது. "என்ன புலியா? புலிக்கறி எப்படிக் கிடைத்தது?" என்றேன் நான். "புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! புலிக்கறி சாப்பிட்டால் வீரம் மிகும்" என்றார். வேறு வழி? சாப்பிடாமல் இலையை விட்டு எழ முடியுமா: எப்படியோ சாப்பிட்டுத் தீர்த்தேன். 4.2.62 3.2.62 சனிக்கிழமை இரவு மந்தைவெளியில் த.தே.க. கூட்டம். சம்பத்தும் கவிஞர் கண்ணதாசனும் பேசினார்கள். நானும் தஞ்சைவாணனும் கவிஞர் சுரதாவோடு கூட்டத்துக்குச் சென்றிருந்தோம். கூட்டம் முடிய இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. நான் நண்பர் திரு. மயிலைநாதன் வீட்டில் படுத்துக் கொண்டேன். காலையில் எழுந்ததும் சுரதா வீட்டுக்குச் சென்றேன். அன்று நடுப்பகல் அவர் வீட்டில் எனக்கும் மயிலைநாதனுக்கும் விருந்து. அன்று மாலை 7 மணியளவில் பாவேந்தரைக் காணப் புறப்பட்டேன். பாவேந்தர் இரவு உணவை முடித்துக் கொண்டு அப்போதுதான் வந்தமர்ந்தார். அன்று அவரே விரும்பித் தம் இளமைக்கால நிகழ்ச்சிகளைப் பொறுமையோடு சொன்னார். அவர் சொன்னதை நான் அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்: "என் தந்தை கனகசபை புதுச்சேரியில் கப்பல் வாணிபம் செய்தவர்; மளிகைமண்டி வைத்திருந்தார். மணிலா, வெங்காயம், வெற்றிலை,