பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அந்தநாட்கள் கோழிமுட்டை, புட்டியில் அடைத்த மிளகுரசம் முதலியவற்றைக் கப்பலில் பிரான்சு முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். ஒருமுறை இவருடைய சரக்கை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் எங்கள் குடும்பமே கவிழ்ந்தது. அப்போது என் தந்தைக்கு வயது எழுபது. பல இலட்சம் வாணிபத்தில் இழப்பு. இப்போது இருக்கும் புதுச்சேரி வீடு நான் தலையெடுத்து வாங்கியது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இயல்பாகவே கூர்மையான அறிவு படைத்தவன் என்று என்னை ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். கணக்கும் கட்டுரையும் அப்போது பள்ளிகளில் முக்கிய பாடங்களாகக் கருதப்பட்டன. என்னுடைய தொடக்கக் கல்வி திருப்புளிசாமி ஐயாவின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் துவங்கியது. திருப்புளிசாமி ஐயா சாத்தானி (பூணுரல் சாத்தாத வைணவர்) வகுப்பைச் சேர்ந்தவர். என் மீது அவருக்கு அளவு கடந்த பற்றுண்டு. அவரிடத்திலே பல நூல்களைப் பாடங்கேட்டேன். அதன் பிறகு கால்வே கல்லூரியில் தமிழ்ப்புலவர் தேர்வுக்குப் படித்தேன். எனக்குக் கணக்கு மிக நன்றாக வரும். நாள்தோறும் புலவர் வகுப்பு மாணவர் எல்லாரும் வழக்கமாக ஓரிடத்தில் கூடுவோம். சிலர் கேரம், சிலர் சொக்கட்டான், சிலர் கடுதாசி (சீட்டு) விளையாடுவார்கள். புலவர் வகுப்பு மாணவர்களுள் உருவத்தில் நான் சிறியவன்; படிப்பில் பெரியவன். நான் சிறியவனாக இருந்ததால் என் நண்பர்களுக்குத் தின்பண்டம், சிகரெட் முதலியவை நான்தான் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். எங்கள் வகுப்புக்கு நல்ல ரிசல்டு வரவேண்டும் என்பதற்காக ஆசிரியர்களின், ஒப்புதலோடு தேர்வு நடக்கும்போது கட்டுரைக்குப் பல படிகள் எடுத்து மற்ற மாணவர்களுக்கும் நான் கொடுப்பதுண்டு. அதைப் பார்த்து எழுதிப் பல மாணவர்கள் வெற்றி பெறுவது வழக்கம். ஒருமுறை தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே திருப்புளிசாமி ஐயா தேர்வுக் கூடத்தின் வாயிலில் வந்து மகிழ்ச்சியோடு, “டே சுப்புரத்னம்! நீ கட்டுரையில் முதல்வனாக வெற்றி பெற்றிருக்கிறாய். நீ கட்டுரையில் 20க்குப் 18" என்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே வந்து கூச்சலிட்டார். நான் சாடை செய்து அவரைப் பேசாமல் போகும்படி கூறினேன். புலவர் தேர்வில் முப்பது பேருக்கு மேல் வெற்றி பெற்றனர். ஆனால் முதன்மையாக நான் வெற்றி பெற்றது மற்றவருக்குத் தெரியாது. நானும் வெளியில் சொல்லவில்லை. வழக்கமாகப் புலவர் வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் மாலையில் கூடும் மன்றத்தில் ஒவ்வொருவரும் நான் அவரைப் பிடித்தேன்; இவரைப் பிடித்தேன்;