பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அந்தநாட்கள் கையார் கொடுத்த ஆணையைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வழக்கம்போல் புலவர் வகுப்பு நண்பர்கள் கூடும் மன்றத்துக்குச் சென்றேன். அங்கிருந்த நண்பர்கள், வேலை எனக்குத்தான்; உனக்குத்தான்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். அந்த மன்றம் இருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் வடை சுட்டுக் கொண்டிருந்தார். அங்கு சென்று நான் மகிழ்ச்சியோடு வடை சாப்பிட்டேன். கடைசியாக எல்லாரும் புறப்படும் நேரத்தில் என் ஆணையை எடுத்துக் காண்பித்தேன். நண்பர்களில் ஒரிருவர் தவிர எல்லாருமே மகிழ்ச்சியடைந்தார்கள். சில நண்பர்கள் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தார்கள். ஆதிமூலம் என்ற நண்பரின் தந்தை எனக்குக் கடிகாரம் ஒன்று பரிசாகக் கொடுத்தார். வேறு சில நண்பர்கள் சட்டை, சால்வை முதலியவை பரிசாக அளித்தார்கள். இது என் மாணவப்பருவ வாழ்க்கை வரலாறு." 5.2.62 எனக்குக் கல்லூரி வகுப்புகள் பிற்பகல் மூன்று மணியோடு முடிவடைந்து விட்டன. மாணவர் விடுதியில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தியாகராய நகருக்குப் புறப்பட்டேன். பாவேந்தர், பங்களா முற்றத்தில் (Portico) பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். நானும் மற்றொரு நாற்காலியை அவரருகில் எடுத்துப் போட்டு உட்கார்ந்தேன். முதன் முதலில் ஆசிரியர் பணிசெய்த நிரவி வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்டேன். அவரும் நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினார். . "நிரவியில் ஆசிரியர் பணி ஏற்றுக் கொண்டபோது எனக்கு வயது 18 முடிந்து சில திங்கள்கள் ஆகியிருந்தன. நிரவி பிரெஞ்சு ஆளுகைக்குட் பட்ட ஒரு சிற்றுார். அங்கு வன்னியரும் பிள்ளைமாரும் குடியிருந்தனர். நான் உருவத்தில் மிகவும் சிறியவனாக இருந்த காரணத்தால், என்னை ஒர் ஆசிரியனாகவே அவ்வூர் மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள். பள்ளி முடிந்து செல்லும்போது வீதி வழியாக வரும் பெண்கள், இதோ போறானே பொடிப்பய, இவந்தா நம்ம ஊர்ப்பள்ளி வாத்தியாராம்!” என்று என் காதில் விழும்படியாகவே சொல்லுவார்கள். 'நிரவி அப்போது நகரத்து நாகரிகம் பரவாத சிற்றுார். புதுவையிலிருந்து என்னைப் பார்க்க நண்பர்கள் யாராவது