பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அந்தநாட்கள் என் பிழைப்பைக் கெடுத்திடாதே" என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சிககுப் பிறகு நிரவியில் பொடிப் பையன் என்ற பெயர் மறைந்து எனக்கு மதிப்புயர்ந்தது. பின்னர் பிரெஞ்சுத் தமிழகத்தில் தமிழில் ஏதாவது ஐயமென்றால் என்னிடம் தான் வருவார்கள். என்னைக் கலக்காமல் எந்தத் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் நடைபெறாது." கவிஞர் நிரவி வாழ்க்கையைப் பற்றிக் கூறி முடித்தபோது இரவு ஒன்பது மணி. கவிஞர் திரைப்பட்ம் பார்க்கப் போகலாமென்று கூப்பிட்டார். அருகிலிருந்த ராஜகுமாரியில் 'Scream of fear என்ற ஆங்கிலப்படம் பார்த்துத் திரும்பினோம். 7.2.62 இன்று கல்லூரி விடுதியிலேயே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு 9 மணியளவில் கவிஞருடைய இல்லம் வந்தேன். கவிஞரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார். நான் எதிரில் அமர்ந்து எழுதுவதற்காகப் பேனாவை எடுத்தேன். "என்ன எழுதப் போறியா?" என்று கேட்டார். "ஆமாங்க. உங்க திருமணத்தைப் பற்றிச் சொல்லுங்க” என்றேன். "அப்படியா சொல்ற” என்று சொல்லி எழுந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தார். பிறகு தம் ஆள்காட்டி விரலை மூக்கு நுனியில் சிறிது நேரம் வைத்திருந்தார். பிறகு கூறத் தொடங்கினார்: “எனக்கு இளமையிலிருந்தே அரசியலிலே ஈடுபாடு அதிகம். காரணம் பாரதியார் தொடர்புதான். யாராயிருந்தாலும், அவனுக்கென்று ஒர் அரசியல் கொள்கை வேண்டும்; அதிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். என்னால் அரசியல் இல்லாமல் இருக்க முடியாது. என்னுடைய அரசியல் ஈடுபாட்டினாலே எனக்கு இளமையிலிருந்தே அடிக்கடி தொல்லை வருவதுண்டு. ஒரிடத்திலே என்னை நிலையாக வைக்காமல் அடிக்கடி வேண்டுமென்றே மாற்றிக் கொண்டிருப்பார்கள். புதுவை அரசியலில் நான் எந்தக் கட்சியில் இருந்தாலும் அது வெற்றி பெறும். கெப்ளே என்பவன் ஆளுங் கட்சித் தலைவன். அவனோடு குட்டியா சபாபதிப் பிள்ளை என்ற பெரிய வழக்கறிஞர் ஒரு முறை தேர்தலிலே போட்டியிட்டார். இந்தப் போட்டியில் நான் பிள்ளை பக்கம் இருந்தேன். பிள்ளை வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து ஒரு