பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அந்தநாட்கள் தமது திருமண வரலாற்றை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொண்டார் கவிஞர். இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். சட்டென்று முடித்துக் கொண்டது எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரது திருமணச் செய்திகளை மேலும் நுணுகிக் கேட்க எனக்குச் கூச்சமாகவும், ஒரளவு அச்சமாகவும் கூட இருந்தது. எனவே பேசாமல் விட்டுவிட்டேன். 8.2.62 "புதுச்சேரியில் பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் போட்டியாகத்தான் இருக்கும். பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளமும், தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளமும் புதுச்சேரி அரசாங்கம் கொடுத்து வந்தது. எனவே இரண்டுகூட்டத்திற்கும் இடையே காழ்ப்புணர்ச்சி எப்போதும் இருந்து கொண்டிருந்தது. பிரெஞ்சு ஆசிரியர்கள் கட்சிக்கு வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் தலைவர்; அவர் புதுச்சேரித் தலைமைப்பள்ளியின் முதல்வர் (Principal). தமிழாசிரியர்கள் கட்சிக்கு நான் தலைவன். சமயம் வரும் போது ஒருவரையொருவர் காலை வாரிவிடுவது எங்களுக்குள் வழக்கம். லுய்ல் ஃபெரி (Jules Fery) என்பவர் 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த பெரிய சமுதாயச் சீர்திருத்தவாதி. கல்வித்துறை சமயவாதிகளின் கையில் இருந்ததை அவர் கண்டித்தார். "பாதிரிமார் கையில் கல்விக் கூடங்கள் இருப்பதால் ஏழை எளியவருக்குக் கல்வி எட்டவில்லை. கல்வியை எல்லாரும் பெறாவிட்டால் ஏழை 1. திருமணத்தின்போது தமக்கு வயது 28 முடிந்துவிட்டதென்று பாவேந்தர் என்னிடம் குறிப்பிட்டார். அவர் கூறியபடி கணக்கிட்டால் பாவேந்தர் திருமணம் 18.4.1919லிருந்து 18.4.1920க்குள் நடைபெற்றிருக்க வேண்டும். 1919இல் திருவாளர்கள் கெப்ளேயும் குட்டியா சபாபதிப் பிள்ளையும் போட்டியிட்ட திருப்புவனைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிந்தவுடன் கவிஞர் மீது பொய் வழக்குப் போடப்பட்டது. 1 திங்கள் 3 நாள் காவலில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்து இரண்டு திங்கள்கள் கழித்துத் திருமணம் நடைபெற்றது. சிறைக்குச் செல்வதற்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பது பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ள தேயில் பாடல்கள்-பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம்-10) நூலில் பாவேந்தர் ஒன்றேகால் ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கணக்குப்படி பார்த்தால் பாவேந்தருக்குத் திருமணம் 30ஆம் வயதில் தான் நடந்திருக்கும் என்று ஆகிறது. எனவே இச்செய்தி சரியானதாகப்படவில்லை. இச்செய்தியைப் பற்றிய உண்மையான விளக்கத்தை அறியப் புதுவை அரசாங்கக் குறிப்பேடுகளை ஆய்ந்து திருப்புவனைத் தேர்தல் நாளையும், பாவேந்தருக்குச் சிறைத்தண்டனை வழங்கிய வழக்கு மன்ற ஆணையையும் கண்டறிய வேண்டும்.