பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 59 ஏழையாகவும், பணக்காரன் பணக்காரனாகவுமே இருக்க நேரிடும். கல்விக் கட்டணங்களைப் பாதிரிமாரிடமிருந்து பிடுங்கி அரசாங்கமே ஏற்று நடத்தினால் குடியரசின் முழுப்பயனை நாட்டு மக்கள் எல்லாரும் நுகர முடியும்” என்று அவர் பிரசாரம் செய்தார். பாதிரிமார்கள் அரசாங்கத்திடம் கோள் சொல்லியும், தம் செல்வாக்கைப் பயன்படுத்தியும் லுய்ல் ஃபெரியை நாடு கடத்தி விட்டனர். லுய்ல் ஃபெரி வெளிநாட்டில் இருந்துகொண்டே தம் பிரசாரத்தை ஒய்வின்றிச் செய்து வந்தார். பின்நாட்டுத்தலைவராகிக் கல்வியைச் சமய ஆதிக்கத்திலிருந்து மீட்டு அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வந்தார். அதிலிருந்து பிரெஞ்சு நாடு லுய்ல் ஃபெரியைக் கல்விச் சீர்திருத்தத் தந்தை என்று போற்றுவது வழக்கம். லுய்ல் ஃபெரியின் நூற்றாண்டு விழா வந்தது. அவ்விழா பிரெஞ்சு நாடு மட்டுமன்றி, பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் அவ்விழா எல்லாப் பள்ளிகளின் சார்பிலும் விமரிசையாகக் கல்வித்துறைத் தலைவர் (சீஃப்) முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவின்போது ஆடல், பாடல், நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாடகத்திற்காக லுய்ல் ஃபெரியைப் பற்றி நான் பாடிய பாடல் ஒன்றும் மாணவர்களால் பாடப்பட்டது. அப்பாடலைப் பாட மாணவர்கள் தொடங்குவதற்கு முன்பே இது மதத்துரோகமான பாட்டு. இதைப் பாடினால் கூடியிருப்போர் உள்ளம் புண்படும்’ என்று கல்வித்துறைத் தலைவரிடம் கிருஷ்ணசாமி நாயுடுவின் ஆட்கள் கோள் மூட்டினர். ஆனால் தலைவர், அவர்களுடைய பேச்சுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறு கட்டளையிட்டார். மாணவர்கள் கீழ்க்கண்ட வரிகளைப் பாடினர். வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை வரவிட வில்லைமத குருக்களின் மேடை நறுக்கத் தொலைந்ததந்தப் பீடை நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை இதைப் பாடியதும் நாயுடுவின் ஆட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே இவ்வரிகளை அப்படியே பிரெஞ்சில் மொழிபெயர்த்துத் தரும்படி கல்வி இலாகாத் தலைவர் கேட்டார். அப்படியே மொழி பெயர்த்தும் கொடுத்தனர். அதைப் படித்த தலைவரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. "இதுதானப்யா நாம் இன்று எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி. சுப்புரத்தினம் பாடியது சரி" என்று சொன்னார். -