பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அந்தநாட்கள் பிறகு என்னைக் கூப்பிட்டுத் தலைவர் பெரிதும் பாராட்டியதோடு, "உன்பேரில் பொறாமைக்காரர்கள் வேண்டுமென்றே கோள் சொன்னார்கள். நீ மீண்டும் என்னை வந்துபார், அவர்களை யெல்லாம் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறிச் சென்றார். பிறகு நான் அவரைச் சந்தித்து எனக்குத் தொல்லை கொடுத்தவர்களை யெல்லாம் வேறு இடங்களுக்கு மாற்றும்படி சொன்னேன். அவ்வாறே மாற்றி அவர்கள் கொட்டத்தை அடக்கினார். அத்தலைவர் இருக்கும்வரையில் என் செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது எனக்கு வயது நாற்பது". இந்த நிகழ்ச்சியை அவர் கூறிமுடித்தபோது இரவு மணி பன்னிரண்டிருக்கும். பாவேந்தர் பொன்னடி என்று குரல் கொடுத்தார். முன்கூடத்தில் இருந்த பொன்னடி எழுந்து ஓடி வந்தார். “இன்று வல்லுணவு எதுவுமில்லை. அதனாலே பசியெடுத்துடுச்சு. ஏதாவது சாப்பிடணுமே” என்றார். உடனே நானும் பொன்னடியும் ராஜகுமாரி திரைப்படக் கொட்டகை அருகில் இருந்த ஒரு விடுதியில் சென்று முட்டை ஆம்லெட்' வாங்கி வந்து கொடுத்தோம்; சாப்பிட்ட பின் உறங்கினார். 9.2.62 இன்று மாலை 5 மணியளவில் கவிஞர் இல்லம் சென்றேன். கவிஞர் வெளியிலே புறப்படத் தயாராக இருந்தார். என்னையும் புறப்படும்படி சொன்னார். கவிஞரும், நானும், பொன்னடியும் தேனாம்பேட்டை சென்று தமிழ்க்கவிஞர் பெருமன்றத்துக்கு பீரோ செய்வதற்குப் பலகை எடுத்தோம். பலகைக்கு ரூ.74/-ம் அதை பீரோவாகச் செய்பவர் கூலி ரூ.30/-ம் செலவாயிற்று. "இது எதற்கு இப்போது வீண் செலவு?’ என்று நான் கேட்டதற்கு, “கவிஞர் பெருமன்றம் சம்பந்தப்பட்ட எல்லா ரெகார்டுகளும் தனியாக ஒர் பீரோவில் இருக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் இந்தத் தமிழ்க்கவிஞர் பெருமன்றம் ஆறு திங்கள்கள் கூட உயிர் வாழவில்லை. இம்மன்றத்தைத் துவங்கியபோது கவிஞர் காட்டிய ஆர்வம் அளவிட முடியாதது. இரண்டுமுறை சென்னைக் கவிஞர்கள் இராமன் தெரு இல்லத்தில் கூடியபொழுது தம் கைச்செலவில் சிற்றுண்டி வழங்கினார். இம்மன்றத்துக்கு வசூலான மொத்த நன்கொடை ரூ. 425. இதில் பெரிய தொகையாக நன்கொடை போட்ட பிரமுகர் பணம் கொடாமல் சில மாதங்கள் இழுக்கடித்தார். கவிஞர் பொறுமையிழந்தார். நேராக அப்பிரமுகர்