பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 6] இல்லத்துக்கு ஒரு நண்பரோடு சென்றார். வரவேற்பு அறையில் போய் அமர்ந்து கொண்டு "அவ என்ன நன்கொடைப் பணம் கொடுக்கறானா இல்லையான்னு கேளு’ என்று ஒரு சத்தம் போட்டார். பிரமுகர் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்ததோடு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். பீரோ செய்யப் பலகை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியதும் கவிஞரும் நானும் சாப்பிட்டோம்; பிறகு ஒய்வாக வெளியில் வந்து உட்கார்ந்தோம். எங்கள் பேச்சு தமிழைப் பற்றியும் தமிழ் அறிஞர்களைப் பற்றியும் திரும்பியது. பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித் துறையில் பணியாற்றியபோது அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்துவந்த ஒரு தமிழ்ப் பேராசிரியரைப் பற்றிப் பேச்சு வந்தது. உடனே அவரைப் பற்றி மிகவும் கடுமையான சொற்களால் பேசத் தொடங்கி விட்டார். "இவர் ஒரு தமிழ்த் துரோகி. ஒரு பெரிய இடத்துத் திருமணத்துக்குப் போயிருந்தபோது இவரும் வந்திருந்தார். விருந்தின்போது என்னையும் சாப்பிடும்படி திருமண வீட்டார் வற்புறுத்தினர். என் உடம்பில் தித்திப்பு நீர் (Sugar) இருப்பதால் நான் விருந்துண்ண மறுத்தேன். பேருக்காவது விருந்தில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு எழச் சொன்னார்கள். நானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நடுவில் எழுந்தேன். உடனே இவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கு முன் எழுந்து ஒடிச்சென்று கையலம்பிக் கொண்டு, எனக்குச் செம்பில் தண்ணிர் மொண்டு கொடுத்தார்; ஒரு செம்புதண்ணிரை என் காலில் எடுத்து ஊற்றினார். குயிலில் இவரைப் பற்றிச் சரமாரியாக எழுதி இந்த அளவு அச்சுறுத்தி வைத்திருந்தேன். தமிழகப் புலவர் குழு பாவாணருடைய 50 சொற்கள் பற்றிய ஆராய்ச்சி சரியானதென்று முடிவுசெய்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மூலம் இராஜா சர். முத்தைய செட்டியாருக்குச் சிபாரிசு செய்ய முயற்சி எடுத்துக் கொண்டது. முத்தைய செட்டியாரைச் சந்திக்கப் புலவர் குழு திருச்சியில் கி.ஆ.பெ. வீட்டில் தங்கியிருந்தது. நான் ஒரு பக்கமாக நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிரில் புலவர் கூட்டம் அமர்ந்திருந்தது. முத்தைய செட்டியார் வந்தார். புலவர்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. எனக்கு மட்டும் வணக்கம் செலுத்திவிட்டு நேராக உள்ளே சென்றார். சிறிது நேரம் உள்ளே ஏதோ பேச்சு நடந்தது. "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்; அவசரம் வேண்டாம்” என்று எனக்குப் பதில்