பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 63 அதன் பிறகு இருவரும் இரண்டாவதாட்டம் திரைப்படம் பார்ப்பதற்காகச் சென்றோம். வழக்கமாக நாங்கள் ஆங்கிலப்படம் பார்க்கத் தான் செல்வது வழக்கம். ஆனால் இன்று நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற தமிழ்ப்படம் பார்க்கச் சென்றோம். சென்னையில் பாவேந்தரோடு வெளியில் செல்லும் நேரங்களில் அவரைச் செலவு செய்யும்படி நான் அனுமதிப்பதில்லை. போதிய அளவு என் சட்டைப்பையில் பணமிருந்தால்தான் அவரோடு வெளியில் செல்வேன். இல்லாவிட்டால் செல்லமாட்டேன். இது அப்போது நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்த கொள்கை. - படம் புதுமையாக இருப்பதாகச் சொல்லி நான் தான் அவரை அழைத்துச் சென்றேன். பையில் ஏழெட்டு ரூபாய் பணம் இருந்தது. டிக்கெட்டுக்கும் டாக்சிக்கும் போதும் என்று நினைத்தேன். கொஞ்சம் காலம் தாழ்த்திச் சென்றதால் டிக்கெட் கிடைக்கவில்லை. வெளியிலே 'பிளாக்"கில் வாங்கிக் கொண்டு கொட்டகைக்குள் நுழைந்தோம். கையில் நான் கொண்டு வந்திருந்த பணம் கிட்டத் தட்டச் செலவாகி விட்டது. இடைவேளையில் வெளியில் எழுந்து வந்தோம். கவிஞர் தாகமாக இருக்கிறது என்று சொல்லி உள்ளே இருந்த கடைக்குச் சென்று கோகோ கோலா கேட்டார். அவனும் சட்டென்று உடைத்துக் கையில் கொடுத்து விட்டான். என்ன விலை? என்று கடைக்காரனைக் கேட்டேன். அவன் அறுபது காசு' என்று சொன்னான். என் சட்டைப்பையில் இருந்த சில்லரைகளைப் பொறுக்கி எண்ணிப் பார்த்தேன். ஐம்பது காசு தான் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்களிடத்தில் காசு இருக்கிறதா? என்று கவிஞரைக் கேட்டேன். அவரும் நான் பணம் எதுவும் எடுத்து வரவில்லையே! இப்போது என்ன செய்வது? என்று கலவரத்தோடு கேட்டார். காசைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அருகில் உள்ள யாரிடமாவது வாங்கிக் கொடுத்துவிடலாம். ஆனால் அந்த இடத்தில் பாவேந்தருக்காக மற்றவரிடத்தில் கை நீட்டிக் காசு வாங்க நேரிட்டு விட்டதே என்று திகைத்தேன். "எதற்கும் உங்கள் சட்டைப் பையைத் தேடிப் பாருங்கள் என்று அவரிடம் சொன்னேன். தேடிப்பார்த்தார். என்ன வியப்பு சரியாகப் பத்துக்காசு அவர் சட்டைப்பையில் இருந்தது. அப்பாடா! அந்தக் காசை வாங்கிக் கடைக்காரன் கையில் அறுபது காசையும் கொடுத்து விட்டேன். உள்ளே படம் ஒடிக் கொண்டிருந்தது. நடுநடுவே கதையின் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்தார். "கதாநாயகன் காதலியிடம் புகைப்படத்தைக் கொடுக்க மறுக்கிறான். இது Immoral" என்றார்.